- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் கதையை நான் இயக்க மறுத்ததற்கு இதுதான் காரணம்... என்ன ரத்னகுமார் இப்படி சொல்லிட்டாரு......

லோகேஷ் கனகராஜ் கதையை நான் இயக்க மறுத்ததற்கு இதுதான் காரணம்… என்ன ரத்னகுமார் இப்படி சொல்லிட்டாரு… அப்போ நண்பர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதா…

- Advertisement -

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். காதல் கதையை மிக ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் கூறிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. இதில் கதாநாயகியாக நடித்திருந்த பிரியா பவானி சங்கருக்கும் நல்ல தொடக்கத்தை இந்த திரைப்படம் கொடுத்தது.

இப்படி முதல் திரைப்படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்னும் திரைப்படத்தை எடுத்தார். இது திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம், ஒரு சிலர் இடத்தில் இந்த திரைப்படம் வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

இதன்பிறகு சந்தானத்தை வைத்து குளுகுளு எனும் திரைப்படத்தை இயக்கினார் ரத்னகுமார். இதுவும் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து சில காலம் இயக்கத்தில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். அதேசமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குழுவிலும் அவர் இடம்பெற்று இருந்தார்.

ரத்னகுமார் லோகேஷ் கனகராஜிற்கு நெருங்கிய நண்பர் என்பதால், லியோ திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதி, அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக லியோ திரைப்படம் சாதனை படைத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை எடுத்து வரும் சூழலில் அதில் ரத்னகுமார் இடம்பெறவில்லை. இதற்குக் காரணம் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தது தான் என்று கூறப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு மற்றும் கதையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை ரத்னகுமார் இயக்குவதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த திரைப்படம் பாக்யராஜ் கண்ணனுக்கு சென்று விட்டது. பென்ஸ் என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசி இருக்கும் ரத்தினகுமார், நான் ஒருவேளை ராகவா லாரன்ஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தால் அது என்னுடைய படமாக இருந்திருக்காது. நாங்கள் கதையை மாற்ற முடிவு செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. லோகேஷ் கனகராஜும் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால், மேயாத மான் போன்று ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்