- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் - கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய...

கேரளாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் – கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார் – மலையாள நடிகர்களை அப்செட் செய்தாரா விஜய்?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜயின் 68வது படம். இதைத்தொடர்ந்து விஜய் 69 என்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு, சினிமாவை விட்டு விலகி விட விஜய் முடிவு செய்திருக்கிறார். அதன்பின் முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே, விஜயை பார்க்க முடியும்.

துவக்கத்தில் தனது ரசிகர்களை மன்றங்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய விஜய் இப்போது அதை, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியிருக்கிறார். இந்த அரசியல் கட்சியில் சேர சமீபத்தில் செயலி ஒன்றை வீடியோ மூலம் அறிமுகம் செய்தார். அதில் சில தினங்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தது, மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு ஷூட்டிங் சென்றுள்ளார் நடிகர் விஜய். த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் சில காட்சிகள் கேரளாவில் படம்பிடிக்கப்படுகிறது. இதற்கான ஏற்கனவே படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, கேரளா சென்று லொக்கேஷன் பார்த்துவிட்டு திரும்பியிருந்தார். அதைத்தொடர்ந்து, விஜய் இப்போது கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார்.

விஜய், இந்த ஷூட்டிங்கில் கலந்துக்கொள்வதற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சென்றுள்ளார். இதற்கு முன் காவலன் படத்தில் நடிப்பதற்காக விஜய் கேரளா சென்றிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.இந்த படமும் விஜய்க்கு வெற்றிப் படமாகவே இருந்தது.

- Advertisement -

விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அதிக வசூலில் முன்னணியில் விஜய் முன்னிலையில் இருப்பதால் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து கிளம்பியது. அது அனல் பறந்த நிலையில், லியோ சக்சஸ் விழாவில் சூப்பர் ஸ்டாருன்னா அது ரஜினி மட்டும்தான், நான் எப்பவுமே உங்கள் தளபதி தான். கடைசி வரை தளபதியாகவே இருக்க விரும்புகிறேன் என அந்த பிரச்னைக்கு விஜய் புல் ஸ்டாப் வைத்தார்.

இப்போது கேரளா சென்ற விஜய்க்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் தந்த உற்சாக வரவேற்பும், திரண்ட ரசிகர் கூட்டமும், அவர்கள் காட்டி ஆரவாரமும் அங்குள்ள மலையாள நடிகர்களை திகைக்க வைத்துள்ளது. வெறித்தனமான ரசிகர் கூட்டத்தில், விஜய் சென்ற காரின் கண்ணாடி உடைபட்டு காரின் பக்கவாட்டு பகுதிகளும் ஒடுங்கி, நசுங்கி சேதமடைந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லாலுக்கு கூட இப்படி ரசிகர்கள் காட்டாத ஆர்வத்தை பார்த்து அங்குள்ள மக்கள் பலத்த ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்