இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இராமாயணா படத்தில் இராவணன் கேரக்டரில் கேஜிஎஃப் பட நாயகன் யஷ் நடித்து வருகிறார். இந்த பிரமாண்ட படைப்பில் இராம பிரானாக இந்தி நடிகர் ரன்வீர் கபூரும் சீதா தேவியாக நடிகை சாய்பல்லவியும் நடித்து வருகின்றனர். இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது. இதன் முதல் பாகம் வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
பாலிவுட் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களில் ஹீரோவாக நடித்த யஷ் அந்த படங்களின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தவர். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என பல மொழிகளில் வெளியான இந்த படங்கள் வசூலில் சாதனை படைத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை நாடு முழுவதும் நடிகர் யஷ்க்கு உருவாக்கித் தந்தது.
இந்நிலையில் மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற திரைப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரக்டன்சஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளது.
டாக்ஸிக் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகை நயன்தாராவும் நடித்திருக்கிறார். யஷ்க்கு அவர் அக்காவாக நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. இதுவரை உறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் யஷ் கூறியதாவது, எனக்கு பேய் படங்களை பார்ப்பது பிடிக்காது. தியேட்டர்களுக்கு சென்று பயப்பட நான் விரும்புவதில்லை. சில நேரங்களில் ஹாரார் படங்கள் பயத்தை விட வேடிக்கையாகவே தோன்றும். அதே நேரத்தில் வலுவான கதைக்களம் இருந்தால் ஹாரர் படங்களில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
ஆனால் ஆக்சன் படங்கள் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட் என்றும் நடிகர் யஷ் அந்த நேர்காணலில் பேசும்போது கூறியிருக்கிறார். இப்போது இராமாயணா படத்தில் இராவணன் கேரக்டரில் நடிகர் யஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை பொருத்த வரை இராமன் கேரக்டரை போலவே இராவணன் கேரக்டரும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த படம் நடிகர் யஷ்க்கு இன்னும் ஒரு சாதனை படமாக அமைய வாய்ப்புள்ளது.





