- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்தில் நடிக்க தயங்கும் நடிகர் ரஜினிகாந்த் - அந்த படத்தின் கசப்பான...

ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்தில் நடிக்க தயங்கும் நடிகர் ரஜினிகாந்த் – அந்த படத்தின் கசப்பான சம்பவங்கள்தான் காரணமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு படமும் கமிட் செய்திருக்கிறார். இப்படி படு பிஸியாக இருந்து வரும் ரஜினிகாந்த் இப்போது சுயசரிதை எழுதி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை மெகா பட்ஜெட்டில் பிரமாண்ட படமாக உருவாக்க உள்ளார். பாகுபலி போல மிக பெரிய படமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தை மும்பையை சேர்ந்த நிதி நிறுவனம் பென்மீடியா 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க முன்வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் 2 ஹீரோக்களாக நடிக்க உள்ளனர். மற்ற நடிகர் நடிகைகளை இயக்குனர் ஷங்கர் தேர்வு செய்து வருகிறார்.

வேள்பாரி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்பது இயக்குனர் ஷங்கரின் முக்கிய விருப்பமாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் எந்திரன் சிவாஜி ரோபோ 2.0 ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ரஜினி வேள்பாரி படத்தில் நடித்தால் அதன் பிஸினஸ் வேற லெவலில் இருக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

- Advertisement -

ஆனால் வேள்பாரி படத்தில் சில காட்சிகளில் ரஜினி கேமியோ ரோலில் வருவாரா அல்லது முக்கியமான ஒரு கேரக்டரில் அவர் நடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ரஜினிகாந்த் நடிக்க விரும்பாமல் தயங்குவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் ரோபோ 2.0 படத்தில் ரஜினி நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிக்கு சில கசப்பான அனுபவங்கள் நடந்தது. அவர் நடித்த சில ரிஸ்க் ஆன காட்சிகளில் உடல் ரீதியாக ரஜினிகாந்த் துன்புறுத்தப்பட்ட நிலையில் அதை ஷங்கர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் கேம் சேஞ்சர் இந்தியன் 2 படங்கள் படுதோல்வியான நிலையில் ஷங்கர் படத்தில் நடிக்க ரஜினிக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்