- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னையும் அவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டி விட்டனர், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

என்னையும் அவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டி விட்டனர், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை – கமல் பட நடிகை ஜெயப்பிரதா சொன்ன தகவல்!

- Advertisement -

பாலிவுட்டில் கடந்த 1990களில் நடிகை ஜெயப்பிரதா முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அந்த காலகட்டத்தில் சலங்கை ஒலி படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே காலகட்டத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக இந்தியில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

நடிகைகள் ஜெயபிரதாவும் ஸ்ரீதேவியும் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் கூட போட்டி நடிகைகளாக தான் இருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதே இல்லை என்கிற ஒரு தகவலை சமீபத்தில் ஜெயப்பிரதா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை ஜெயபிரதா அந்த நேர்காணலில் கூறியதாவது, நாங்கள் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். இருவரும் சகோதரிகளாக கூட நடித்திருக்கிறோம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே மாட்டோம். ஒருவரை ஒருவர் ஏறிட்டு கூட பார்க்க மாட்டோம். எங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது.

ஒருவேளை யாராவது எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினால் அப்போதைக்கு ஒரு ஹலோ சொல்லிக் கொண்டு ஒதுங்கி விடுவோம். இதை கவனித்த மூத்த நடிகர்கள் ஜித்தேந்திரா மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் எங்கள் இருவரையும் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி விட்டார்கள்.

- Advertisement -

அப்படியாவது நாங்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டோமா? என்று அவர்கள் இதை செய்தார்கள். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வில்தான் முடிந்தது. ஒரு மணி நேரமாக அந்த அறைக்குள் தனியாக இருந்தும் நாங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று ஜெயபிரதா அப்போது கூறியிருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டில் நடிகை ஸ்ரீதேவி மறைந்த போது இதுகுறித்து பெரிதும் வருத்தம் தெரிவித்த ஜெயப்பிரதா, அவருடன் இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றியும் நீண்டகால நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போனது என் வாழ்நாளில் மிகப்பெரிய வருத்தம். ஸ்ரீதேவி எப்போதாவது தன் செல்போன் நம்பரை கேட்டுக் கொண்டிருந்தால் கூட ஒருவருக்கொருவர் பேசியிருக்கலாமே என்று அவர் விரும்பியதாகவும் அந்த நேர்காணலில் ஜெயபிரதா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்