- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம்… மேக்கப் ரூமில் நடந்த அந்த சம்பவம்தான் - பிரபல...

நயன்தாராவின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம்… மேக்கப் ரூமில் நடந்த அந்த சம்பவம்தான் – பிரபல மலையாள நடிகை ஓப்பன் டாக்

- Advertisement -

நடிகை நயன்தாரா, கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். மலையாளத்தில் மானசிகாரே என்ற படத்தில் நடித்த அவரை ஐயா படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஹரி. அதன்பிறகுதான் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் பயணம் ஆரம்பித்தது. இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ரூ. 12 கோடியை தொட்டிருக்கிறார்.

கேரளாவில் இருந்த போது சேனல் ஒன்றில் நயன்தாரா பணிபுரிந்தவர். அதே சேனலில் பணிபுரிந்த மாலா பார்வதி என்பவர், பிறகு பல சீரியல்களில் நடித்திருக்கிறார். மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். தமிழில் இது என்ன மாயம் படத்திலும் மாலா பார்வதி நடித்துள்ளார். அப்போது நடந்த நயன்தாரா குறித்த முக்கிய விஷயத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகை மாலா பார்வதி, நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,
நானும், டயானா மரியம் குட்டன்( நயன்தாரா) இருவரும் ஒரே சேனலில் வேலை பார்த்தோம். மற்றவர்களுக்கு மேக்கப் போட்டுவிட எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த சேனலின் மேக்கப் ரூமுக்கு நான்தான் பொறுப்பாளராக இருந்தேன்.

சமயம் என்ற நிகழ்ச்ச்சிக்காக, நான் நயன்தாராவுக்கு மேக்கப் போட்டுக்கொண்டிருந்த போது, அவரது பெற்றோரும் அங்கிருந்தனர். அப்போது அவர், டயானா மரியம் குட்டனுக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் எந்த இயக்குனர் படத்தில் நடிப்பது நல்லது என்று, என்னிடம் கேட்டார்கள். சத்யான் அந்திக்காடு டைரக்‌ஷனில் நடித்தால் அவளது கேரியர் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

- Advertisement -

அதன்படியே அவரது இயக்கத்தில் மானசிகாரே என்ற படத்தில் டயனா மரியம் குட்டன் நடித்தார். அவர்தான் நயன்தாரா என அவரது பெயரையும் மாற்றினார். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து அன்னபூரணி படம் ஷூட்டிங்கில்தான் நயன்தாராவை பார்த்தேன். லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவருக்கு என் நினைவெல்லாம் இருக்குமா என யோசித்தேன். ஆனால் என்னை பார்த்தவுடன் என்னிடம் வந்து சகஜமாக, சந்தோஷமாக பேசினார்.

நான் சைவம்தான் சாப்பிடுவேன் என்று அவருக்கு தெரிந்திருந்ததால் எனக்கு சைவ உணவு வரவழைத்து சாப்பிட வைத்தார். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் சினிமாவில் பெரிய சாதனைகளை புரிந்து உச்சத்தில் இருக்கும் நயன்தாராவை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அன்று மேக்கப் ரூமில், பேசிய அந்த விஷயம்தான் நயன்தாராவின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்