- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட அந்த 3 படங்கள் என்னாச்சு? ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லையே?...

நடிகர் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட அந்த 3 படங்கள் என்னாச்சு? ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லையே? குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்!

- Advertisement -

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவருக்கு நான்கு சகோதரர்கள் ஒரு சகோதரி உள்ளார். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டு விட்டார். இந்த நிலையில் தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றினர்.

இந்நிலையில் அவரது மகன் மாரியப்பன் தங்கவேலு இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரராக உள்ளார். அவர் தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார் இரியோ டி செனிரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி 42 பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

- Advertisement -

2020ம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஜனவரி 25ம் தேதி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இந்திய அரசு இவருக்கு ஆகஸ்ட் 2020ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தடகள வீரர் மாரியப்பன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்பிறகு அந்த படம் குறித்த எந்த தகவலும் இல்லை. அதே போல் இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிப்பதாக 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

இந்த படத்தின் அறிமுக துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் இசைஞானி இளையராஜா இயக்குனர் அருண் மாதேஸ்வரன் போன்றவர்களும் கலந்துக்கொண்டனர். தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 2 பாகங்களாக இளையராஜா படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. அந்த படமும் அப்படியே நின்று போனது.

அதே போல் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின. ஆனால் அந்த படமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த படங்கள் நடிகர் தனுஷால் கைவிடப்பட்டதா, மாரியப்பன் தங்கவேலு இசைஞானி இளையராஜா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏன் நிறுத்தப்பட்டன? நிஜ நாயகர்களின் கதைகள் திரையில் வராதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்