மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அவருக்கு கைதி படமும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றிப் படங்களை தந்த அவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தை இயக்க உள்ளார்.
இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா புரடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஜினி 171 படத்தின் துவக்க விழா நடக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் என்ற இசை ஆல்பம் வீடியோவின் டீசர் வெளியானது. இதில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே பல ஆண் நண்பர்களுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் வாழ்க்கை நடத்தி வரும் ஸ்ருதிஹாசன், இதில் புகுந்து விளையாடி இருக்கிறார். இன்னும் ஆல்பம் வெளியானால், இதுபோன்ற இன்னும் பல அந்தரங்க காட்சிகளை பார்க்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லை என்று கூறிவரும் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் மகள் அழைத்தவுடன் நடிக்க சம்மதித்தது மட்டுமின்றி, மிகவும் ஆபாசமான நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் கமல்ஹாசனின் வெறித்தமானமான ரசிகன் என்று ஏற்கனவே மேடைகளில் சொல்லி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இப்படி தனது சினிமா குருவாக கமல்ஹாசனை கருதும் லோகேஷ் கனகராஜ், கமல் மகளுடன் இப்படி ஒரு உல்லாச கொண்டாட்டம் போட்ட டைரக்டர், நிச்சயமாக தலைவர் ரஜினிகாந்த் படத்தை சொதப்பி விடுவார். விக்ரம் படத்தை விட, ஜெயிலர் படத்தை விட மிகப்பெரிய மாஸ் லெவல் படமாக அந்த படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்றுதான் சூப்பர் ஸ்டார் ஆசைப்படுகிறார்.
ஆனால் கமல்ஹாசனின் மிகத் தீவிரமான வெறித்தமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், விக்ரம் வெற்றியால் கார் வாங்கிக்கொடுத்த கமல்ஹாசனுக்குதான் விசுவாசமாக நடந்துக்கொள்வார். அதனால் லியோ படம் போல, ரஜினி 171 படத்தையும் கண்டிப்பாக சொதப்பி விடுவார். ரஜினி படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை விட்டுவிட்டு கமல் மகளுடன் குத்தாட்டம் போட்ட லோகேஷ் கனகராஜ், தலைவர் படத்தை இயக்கக் கூடாது என, ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லோகேஷூக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.





