- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயின் தாய் மாமா பிரபல பாடகர்… அவரும் மகனும் நடிகர்தான் - தளபதியின்...

நடிகர் விஜயின் தாய் மாமா பிரபல பாடகர்… அவரும் மகனும் நடிகர்தான் – தளபதியின் மாமா மகன் இவரா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார் என்றும், டிவிவி எண்டர்டெயின்ட்மென்ட் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய் சினிமா பயணத்துக்கு அடுத்த ஆண்டு இறுதியுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடுவதாக அவரே ஏற்கனவே அறிவித்து விட்டார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள அவர், அடுத்தடுத்து கட்சி சார்ந்த பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தனது கட்சியில் சேர அதற்கான செயலியை விஜய் அறிமுகப்படுத்திய நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த செயலி வாயிலாக கட்சியில் சேர்ந்துள்ளனர்.

நடிகர் விஜயின் உறவினர் பெரியம்மா மகன் விக்ராந்த் ஏற்கனவே சினிமா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. பாண்டியநாடு, முத்துக்கு முத்தாக, சமீபத்தில் வெளியான லால் சலாம் வரை குறிப்பிட்ட படங்களில் மட்டுமே விக்ராந்த் நடிப்பு கவனிக்கும்படியாக இருந்தது.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் விஜயின் தந்தை கடந்த 1980களில் மிக முக்கிய இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்தவர். நான் சிவப்பு மனிதன் போன்ற பல வெற்றிப் படங்களை தந்தவர். அவரது மனைவி, அதாவது விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், ஒரு பாடகி. இசைக்குழு வைத்து பல மேடைகளில் இசைக் கச்சேரி நடத்தி இருக்கிறார். சினிமாவிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஷோபாவின் சொந்த சகோதரர் எஸ் என் சுரேந்தர். இவர்தான் நடிகர் விஜயின் சொந்த தாய் மாமா. மிக பிரபலமான பாடகர். 1980களில் மிகச்சிறந்த பல பாடல்களை பாடியிருக்கிறார். மாமரத்து பூ எடுத்து, பூங்கதவே தாழ் திறவாய் போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர். மேலும் எஸ் என் சுரேந்தர், நடிகர் மைக் மோகனின் பின்னணி குரலாக பேசியவர். நடிகர் மோகன் படங்களில் அவருக்கு பின்னணி பேசிய டப்பிங் கலைஞர் இவர்தான்.

எஸ் என் சுரேந்தரின் மகன்தான் விராஜ். விஜய்க்கு தாய் மாமா மகன். விராஜ், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். உன்னை நினைத்து படத்தில் லைலா தம்பியாக நடித்திருப்பார். அந்நியன் படத்திலும் சிறுவன் அம்பியாக நடித்திருப்பார். சென்னை 28 படத்தில், பீச்சில் கிரிக்கெட் விளையாடும் சிறுவனாக நடித்திருப்பார். இப்போது வாலிபனாகி விட்ட விராஜ், அருண்விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மிஷன் சேப்டர் 1 படத்திலும் நடித்திருந்தார். விஜய் மிகப்பெரிய நடிகராக இருந்தும், அவரது தாய் மாமா மகனுக்கு தன் படங்களில் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்