- Advertisement -
Homeபொழுதுபோக்குலீக் ஆனது லியோ படத்தின் புதிய அப்டேட், விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு...

லீக் ஆனது லியோ படத்தின் புதிய அப்டேட், விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்க முடிவெடுத்த படக்குழு? என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” திரைப்படத்திற்கு அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள்.

அதன் பின் ஒரு வழியாக “லியோ” என்ற டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவந்தது. அதனை தொடர்ந்து “லியோ” படம் தொடர்பாக வெளிவந்த ஒவ்வொரு தகவல்களையும் ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதால் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது வருகிற விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிடப்போவதாக செய்திகள் உலா வருகின்றன.

லோகேஷ் கனகராஜ், “விக்ரம்” திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தபோது கமல்ஹாசனின் பிறந்தநாளில் “விக்ரம்” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதே போல் தற்போது விஜய் பிறந்தநாள் அன்று “லியோ” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்