- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த நடிகர் விஷால்; தப்பித்துக் கொண்ட கார்த்திக் சுப்பராஜ் -...

ஓடிடி நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த நடிகர் விஷால்; தப்பித்துக் கொண்ட கார்த்திக் சுப்பராஜ் – இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்துருக்கா?

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் ரத்னம். டைரக்டர் ஹரி இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த படம் கடந்த வாரத்தில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனமாக உள்ளது. விஷாலின் நடிப்பு, இந்த படத்தில் திருப்தி தரவில்லை என்பதும், இதில் இரட்டை நாயகி கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்தது படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அது தான் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வந்த நடிகர் விஷால், கடந்தாண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருந்தவர் நடிகர் எஸ் ஜே சூர்யாதான்.

- Advertisement -

நடிப்பு அரக்கனாக அவர் இந்த படத்தில், பொம்பள சோக்கு கேக்குதாடா பொம்பள சோக்கு என்று கேட்டபடி தோளை குலுக்கி நடித்த அந்த காட்சி, பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் ஆனது. உண்மையில் மார்க் ஆண்டனி படம் வெற்றிக்கு பெரும்பாலான பங்கு நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு தானே தவிர விஷாலுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் மார்க் ஆண்டனி படத்தின் மிகப்பெரிய வெற்றியை பார்த்து அசந்து போன நிலையில்தான், விஷால் ஹீரோவாக நடித்த ரத்னம் படத்தை உடனடியாக இயக்குனர் ஹரி துவைக்கினார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்தார்.ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தை தயாரித்தாலும் இந்த படத்துக்கு பணம் முதலீடு செய்தது ஜி ஸ்டுடியோதான். ஜீ ஸ்டுடியோ 20 கோடி ரூபாயை இந்த படத்துக்காக முதலீடு செய்தனர்.

- Advertisement -

ஆனால் அதற்கு மாற்றாக இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமத்தை அவர்கள் பெற்றுவிட்டனர். மார்க் ஆண்டனி வெற்றியால் அசந்து போன அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் இந்த படத்தை ரூ. 18 கோடிக்கு ஜி ஸ்டுடியோவிடம் இருந்து நம்பிக்கையுடன் வாங்கியது. இப்போது ரத்னம் வெளியான நிலையில், படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.இதுவரை வசூலில் 7 கோடியை கூட தாண்டவில்லை என்று கூறப்படுகிறது.

ரத்னம் படத்தை அவசரப்பட்டு 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம், பலத்த குழப்பத்தில் தவித்து வருகிறது. ஏனெனில் தியேட்டருக்கே ரசிகர்கள் வராத நிலையில், இந்த படத்தை ஓடிடியில் வெளியிடுவது லாபம் தருமா, என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில், ஜீ ஸ்டுடியோ 18 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைமுக்கு படத்தை தள்ளி விட்டு நிம்மதியாக இருந்து வருகின்றனர். ஏனெனில் அவர்கள் தயாரிப்பு 20 கோடியில் 18 கோடி வந்துவிட்டது. இப்படி ஓடிடி தளத்துக்கும் ரத்னம் படம் மூலம் ஆப்பு வைத்துவிட்டார் விஷால்.

- Advertisement -

சற்று முன்