- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு மனதாக தேர்வான சபாநாயகரை கலாய்த்து தள்ளிய தமிழக முதல்வர் விஜய் - குட்டி கதை...

ஒரு மனதாக தேர்வான சபாநாயகரை கலாய்த்து தள்ளிய தமிழக முதல்வர் விஜய் – குட்டி கதை சொல்லி பயமுறுத்திய முதல்வர்!

- Advertisement -

இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் விஜயும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது அவையில் முதல்வர் விஜய் பேசியதாவது, புதிய சபாநாயகரை அவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் கையை பிடித்து அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறே இந்த சம்பவத்தில் உள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள நடைமுறைகளே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும். மன்னர் இருந்த காலத்திலேயே அங்கு பாராளுமன்றம் இயங்கியுள்ளது. அப்போது அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் இயங்கியது. அங்கு மன்னர் ஒரு பணியை செய்ய விரும்புவார். பாராளுமன்றம் பெரும்பாலும் மன்னரது விருப்பத்தை நிராகரிக்கும்.

மன்னர் விரும்பிய நடவடிக்கையை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்ற தகவலை சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவரான ஸ்பீக்கர் என்பவர்தான். பாராளுமன்றத்தில் நடந்ததை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர். அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர அந்த ராஜ்ஜியத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.

- Advertisement -

தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி மன்னர் ஆணையிடுவார். பாராளுமன்ற தலைவரின் தலையை வெட்டி விடுங்கள் என்று மன்னர் ஆணையிடுவார். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.

எனவே புதிதாக பாராளுமன்றம் இங்கிலாந்தில் அமையும் போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே தலை தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓட்டம் பிடிப்பார். அப்போது அவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி கையை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு என்று முதல்வர் விஜய் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

சற்று முன்