- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைப்படமாகும் இளையராஜாவின் பயோபிக்... மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து கதாபாத்திரங்களில் நடிப்பது யார் யார்...

திரைப்படமாகும் இளையராஜாவின் பயோபிக்… மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து கதாபாத்திரங்களில் நடிப்பது யார் யார் தெரியுமா?…

- Advertisement -

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் இளையராஜா. 1970களில் தனது இசையுலக வாழ்க்கையில் பயணமாக ஆரம்பித்த இளையராஜா, தற்போது வரை அந்தத் துறையில் கோலோச்சி இருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்பட 1500 மேலான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக கடந்த காலங்களில் கூறப்பட்டது. அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். அதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இளையராஜாவுடன், வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், இந்த திரைப்படத்திற்கான இசையை கேட்பதில் ஆர்வமுடன் இருப்பதாக கூறியிருந்தார்.

இதில் இளையராஜா தான் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் அவர் இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனிடைய படத்தில் நடிக்கும் பிற நடிகர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இளையராஜாவின் திரையுலக பயணத்தில் மணிரத்னம் முக்கிய பங்கு வகிப்பவர். இருவரும் இணைந்து, மௌன ராகம் அக்னி நட்சத்திரம் அஞ்சலி தளபதி ஆகிய திரைப்படங்களை கொடுத்துள்ளனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் மணிரத்னம் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது வென்ற காட்சிகள் இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதேபோல் வைரமுத்து கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் சூழலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்