- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்ன பட்ஜெட்ல யாரும் படம் எடுக்க வர வேண்டாம்... நடிகர் விஷால் கறார்... இது என்ன...

சின்ன பட்ஜெட்ல யாரும் படம் எடுக்க வர வேண்டாம்… நடிகர் விஷால் கறார்… இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு என பலரும் கிண்டல்…

- Advertisement -

நடிகர் விஷாலுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியைக் கொடுத்துள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு முன்பு, விஷால் நடித்த பெரும்பாலான படங்கள் படுதோல்வி அடைந்தன.

சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் தொடங்கி சக்ரா, அயோக்யா, வீரமே வாகை சூடும், எனிமி, லத்தி, ஆக்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி தோல்வி அடைந்தது. இதில் சில படங்கள் திரையரங்களில் வந்தது கூட பலருக்கும் தெரியாமல் போனது.

- Advertisement -

இதன் பிறகு விஷால் திரை உலகை விட்டு விலகுவதே சரி என்று பலரும் கூறி வந்தனர். நடிகரும் அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். இதனால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் கடைசி அம்பாக, மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

கடந்த 15 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், யாருமே எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனியின் இந்த வெற்றிக்கு, முழுக்க முழுக்க எஸ் ஜே சூர்யா தான் காரணம் என்று பலரும் கூறினர். அந்த அளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார் எஸ் ஜே சூர்யா. ஜாக்கி பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்த அவர், ஒவ்வொரு காட்சியிலும் விஷாலுக்கு போட்டி போட்டு நடித்தார்.

- Advertisement -

படத்தில் ஹீரோ விஷாலா இல்லை எஸ் ஜே சூர்யாவா என கேள்வி எழுவது போல, ஜாக்கி பாண்டியனின் ரோல் அமைந்திருந்தது. டைம் ட்ராவல் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஷால், படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேசி இருக்கும் அவர், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் முடங்கிப் போய் உள்ளது. இதனால் 4 கோடி ரூபாய் செலவில் படத்தை எடுக்கும் திட்டத்தில் எந்த ஒரு இயக்குனரும் வர வேண்டாம் என பேசியுள்ளார். விஷாலின் இந்த பேச்சு பெரும் விவாத பொருளாகியுள்ளது. போர் தொழில், டாடா, அயோத்தி, குட் நைட் உள்ளிட்ட சிறிய திரைப்படங்களே ரசிகர்களை தற்போது பெரிதும் கவர்ந்திருக்கும் நிலையில், விஷாலின் இந்த பேச்சு காமெடியாக உள்ளது என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்