- Advertisement -
Homeபொழுதுபோக்குரீலிஸ் ஆன 10 நாட்களில் லப்பர் பந்து படம் வசூல் எவ்ளோ தெரியுமா? அட இசைஞானியே...

ரீலிஸ் ஆன 10 நாட்களில் லப்பர் பந்து படம் வசூல் எவ்ளோ தெரியுமா? அட இசைஞானியே இப்படி பண்ணிட்டாரே? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

- Advertisement -

அட்டக்கத்தி, விசாரணை, குக்கூ, ஒருநாள் கூத்து, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் தினேஷ். இவருக்கு அட்டக்கத்தி தினேஷ் என அடைமொழி இருந்தாலும், அவரை அவர் விரும்புவதில்லை. இப்போது வயதான தோற்றத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதே போல், லப்பர் பந்து படத்தில் மற்றொரு நாயகனாக நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். தினேஷ் மாமனார் கேரக்டரிலும், ஹரீஷ் கல்யாண் மருமகன் கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது, இதில் விஜயகாந்த் ரசிகராக தினேஷ் நடித்துள்ளார். பார்க்கிங் படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் பெரிய வரவேற்பை தந்துள்ளது.

- Advertisement -

தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் செய்துள்ள இந்த படம் கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. படத்தின் ஓபனிங் முதல் நாளில் இருந்தே லப்பர் பந்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. படம் பார்த்த அனைவருமே பாசிடிவ் விமர்சனங்களை தருவதால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது.

அதுமட்டுமின்றி துவக்கத்தில் குறைவான எண்ணிக்கையில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன லப்பர் பந்து, இப்போது இரட்டிப்பு எண்ணிக்கையில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக பல தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

- Advertisement -

சமீபத்தில் லப்பர் பந்து படக்குழுவினரை நேரில் சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இன்று இசைஞானி இளையராஜா லப்பர் பந்து படக்குழுவினரை நேரில் வரவழைத்து பாராட்டி உள்ளார். அவரது இசையில் வெளியான நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல், லப்பர் பந்து பயன்படுத்தப்பட்டு பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி லப்பர் பந்து படம் வெளியான நிலையில், கடந்த 10 நாட்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இன்னும் ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் இருப்பதாலும், ரிபீட் ஆடியன்ஸ் அதிகளவில் வருவதாலும் இன்னும் வசூல் பல கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்