- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தெலுங்கு பக்கம் போகிறாரா தனுஷ்... விட்டா... அங்கேயே செட்டில் ஆகிடுவார் போல இருக்கே...

மீண்டும் தெலுங்கு பக்கம் போகிறாரா தனுஷ்… விட்டா… அங்கேயே செட்டில் ஆகிடுவார் போல இருக்கே…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு நேரடியாக இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது அமைகிறது. இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதில் பிச்சைக்காரன் கெட்டப்பில் தனுஷ் இருந்தார். இந்த திரைப்படத்தில், நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம், கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கமுலா இயக்கும் இந்த திரைப்படத்தில், தனுசுக்கு கோடீஸ்வரன் கெட்டப்பும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இளையராஜாவின் பயோபிக் படத்தின் தனுஷ் நடிக்கிறார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு விழா நடைபெற்றது. அதில் இளையராஜாவுடன் வெற்றிமாறன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தத் திரைப்படத்தை, ராக்கி, சாணி காகிதம் படங்களை எடுக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இதற்கான சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனேகமாக இயக்குனர் மணிரத்னம் கேரக்டரில் மாதவன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதே போல் ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரத்தில் சிம்புவும், வைரமுத்து கதாபாத்திரத்தில் விஷாலும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் தனுஷ் தெலுங்கு பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜூதான் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

அனேகமாக தனுஷின் பிறந்தநாள் என்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயனை, திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் சூடு பிடித்துள்ளன. ஜூலை மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்