விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதற்கான பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், சினேகா பிரபுதேவா பிரசாந்த் லைலா பிரேம்ஜி அமரன் வி டிவி கணேஷ் மீனாட்சி சவுத்ரி என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது.
இந்தப் படத்தில் தந்தை மகனிடம் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பது உறுதியாக இருக்கிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஷார்ட்ஸ் வீடியோ ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
அரசியலுக்கு வருவதாக கூறிவிட்ட விஜய், தனது 69 ஆவது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாகவே அந்த திரைப்படத்தை யார் எடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பட்டியலில் பல்வேறு இயக்குனர்களின் பெயரும் அடிப்படை கடைசியில், எச் வினோத் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வினோத், கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை கொடுத்து அசத்தினார். தமிழ் சினிமாவில் எத்தனையோ காவல்துறை திரைப்படங்கள் வந்திருந்தாலும் அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது போல அமைந்தது இந்த திரைப்படம்.
பிறகு அஜித் குமாருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதில் துணிவு திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும் என்றால் மூன்று திரைப்படங்களும் சுமாராகவே இருந்தன. இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் உடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பையும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால் திடீரென அந்த கூட்டணி பிரிந்தது. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் விஜயின் 69 ஆவது திரைப்படத்தை அவர்தான் இயக்குவதாக கூறப்பட்டு வருகிறது. இதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் தீரன் படத்தில் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான படப்பிடிப்பை தொடங்கப் பணியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழம்பி போய் இருக்கும் விஜய் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.





