- Advertisement -
Homeபொழுதுபோக்குவிசுவாசம் என்றால் இப்படித்தான் இருக்கணும், திடீரென போஸ்ட மேன் வேலை பார்க்க துவங்கிய நடிகர்...

விசுவாசம் என்றால் இப்படித்தான் இருக்கணும், திடீரென போஸ்ட மேன் வேலை பார்க்க துவங்கிய நடிகர் பரத் – ஆச்சரியத்தில் கோலிவுட் வட்டாரம்

- Advertisement -

நடிகர் பரத், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற படத்தில் அறிமுகமானார். சித்தார்த், ஜெனிலியா ஜோடியாக நடித்த இந்த படத்தில் பரத், தேவயானி தம்பி நகுல், இன்றைய இசையமைப்பாளர் தமன், மணிகண்டன் ஆகியோர், சித்தார்த்தின் நண்பர்களாக நடித்திருப்பர். இந்த படத்தில் மங்களம் சார் கேரக்டரில் விவேக் அசத்தியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பரத் பல படங்களில் நடித்தார். மெட்டி ஒலி டைரக்டர் திருமுருகன் டைரக்‌ஷனில் பரத் நடித்த எம்டன் மகன் படம் பெரிய வரவேற்பை பரத்துக்கு பெற்றுத் தந்தது. இதில் நாசர் மகனாக, மளிகை கடையில் வேலை செய்யும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். இதில் கோபிகா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வட்டாரம் படத்தில் ஆர்யாவுடன் பரத் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் படத்தில், மெக்கானிக் முருகன் கேரக்டரில் நடித்து வேற லெவலில் வரவேற்பு பெற்றார். இந்த படம் பரத் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. வெயில் படமும் பரத்துக்கு நல்ல படமாக அமைந்தது. இதில் பாவனா ஜோடியாக நடித்திருந்தார்.

செல்லமே, நேபாளி, கூடல் நகர், வானம், சேவல், முனியாண்டி, விலங்கியல் 3ம் ஆண்டு, பழனி, தம்பிக்கு இந்த ஊரு, ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, முக்கிய இடத்தை பரத்தால் பிடிக்க முடியவில்லை. இப்போது, இயக்குனர் முத்தையா படத்தில் வில்லனாக நடிக்க பரத் கமிட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, மறுமணம் நடக்க இருக்கிறது. இதற்காக இயக்குனர் ஷங்கர் நிறைய இடங்களுக்கு சென்று, தன் நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என திருமண பத்திரிகை கொடுத்து, அவரது மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இதனால், திருமணத்துக்கு முக்கியஸ்தர்கள் விடுபட்டு போகக் கூடாது என்பதால், நடிகர்களுக்கு அழைப்பிதழ் தரும் பொறுப்பை நடிகர் பரத்திடம் ஷங்கர் ஒப்படைத்திருக்கிறார். பாய்ஸ் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் என்ற நன்றியுடன், விசுவாசத்துடன் அந்த அழைப்பிதழ்களை நடிகர்களை நேரில் சென்று கொடுத்து வருகிறார் பரத். அதே போல் இயக்குனர்களுக்கு லிங்குசாமி, வசந்தபாலன் ஆகியோரும், நடிகைகளுக்கு அதிதி ஷங்கரும் அழைப்பிதழ்களை நேரில் சென்று அவர்களை பார்த்து கொடுத்து, அழைப்பு விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்