தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து. அவரது மகள் வழி பேத்தி தரணீஸ்வரிக்கும், தனுஷ் நடித்துவரும் இட்லி கடை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷூக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
இந்த விழாவில் முக்கிய அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர். ஆகாஷ் சினிமா தயாரிப்பாளர் என்பதால் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா, தனுஷ் ஆகியோரும் தயாரிப்பாளர் ஆகாஷூக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வகையில் அவரகளுக்கும் திருமண விழா அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் இந்த திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது நடிகை நயன்தாராவும் திருமண விழாவிற்கு வருகை தந்தார். தனுஷ் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து 4 சோபாகள் தள்ளி நயன்தாரா அமர்வதற்கான இருக்கையை விழா ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.
ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நயன்தாரா அமராமல், தனுஷூக்கு அருகில் இருந்த சோபாவில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி அமர்ந்திருந்தார். அவரிடம் தானாக சென்று பேசுவது போல் பேசிய நயன்தாரா, பிறகு அந்த சோபாவிலேயே அமர்ந்துவிட்டார். தனுஷூக்கு அடுத்ததாக அவர் அமர்ந்து கொண்டார்.
அப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை ஆனால் அதே நேரத்தில் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன் போல், நயன்தாரா கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி கெத்து காட்டிக்கொண்டு இருந்தார். தனுஷ் முகத்திலும் நயன்தாரா முகத்திலும் இருந்த கோபமும், வெறுப்பும் இருவருக்கும் இன்னும் பகைமை உணர்வு தீரவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.
நடிகர் தனுஷூக்கு அருகே இருந்த சோபாவில் நயன்தாரா அமர்ந்து, நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் போல் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நயன்தாராவுடன் சென்ற சிலரே எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு அதை வைரலாக்கி உள்ளனர். அதாவது நயன்தாரா நடிகர் தனுஷை மதிக்காமல் திருமண விழாவில் பங்கேற்று கெத்து காட்டினார். அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெருமிதப்படுவதைப் போன்று காட்டி இருக்கின்றனர். திருமண விழாவில் தனுஷ், நயன்தாரா பங்கேற்றது மறைந்து போய், நயன்தாரா காட்டிய பந்தா விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





