- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் மகனுக்கு தானாக முன்வந்து உதவிய டான்ஸ் மாஸ்டர், நன்றிக்கடனை தீர்க்க முன்வருவாரா நடிகர் விஜய்?...

விஜயகாந்த் மகனுக்கு தானாக முன்வந்து உதவிய டான்ஸ் மாஸ்டர், நன்றிக்கடனை தீர்க்க முன்வருவாரா நடிகர் விஜய்? – இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தமிழ் சினிமா வளர்ச்சிக்காக ஒரு தனிப்பட்ட மனிதராக, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக அவர் செய்த பணிகளை, இப்போது யாராலும் செய்ய முடியாது. தமிழ் சினிமாவின் பிதாமகன்களாக கருதப்படும் ரஜினி, கமல் கூட எதையும் முன்னெடுத்த நடத்த ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

இன்று தமிழ் சினிமாவில் ரூ. 200 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு சம்பளமாக வாங்குகிறார் நடிகர் விஜய். ஆனால் அப்போது அவர் நடிக்க வந்த புதிதில் எஸ்ஏ சந்திரேசகர் என்கிற டைரக்டர் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. மற்றபடி அவர் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இல்லை. இப்படியே சில படங்கள் நடித்தால், தன் மகனின் எதிர்காலம் என்னாகும் என பயந்து போனார் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்.

- Advertisement -

அந்த நேத்தில் ஆபத்பாந்தவனாய் உதவியவர்தான் கேப்டன் விஜயகாந்த். செந்தூரப்பாண்டி என்ற படத்தில், விஜய்க்கு அண்ணனாக சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தார். அதன்பிறகுதான் விஜய்க்கு சினிமா மார்க்கெட்டில் ஒரு அடையாளம் கிடைத்தது. அதன்பிறகுதான் அவரது வளர்ச்சி அபாரமாக அதிகரித்தது.

நடிகர் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாத இறுதியில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மனைவி பிரேமலதா, விஜயகாந்த் துவங்கிய தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், அப்பா இடத்தில் இருந்து கட்சியை கவனித்து வருகிறார். இப்போது தேமுதிக வேட்பாளராக, விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் நிற்பது விஜயகாந்தின் எவர்கிரீன் நாயகியாக இருந்த ராதிகா சரத்குமார்தான்.

- Advertisement -

இதற்கிடையே, விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் ஆர்வமாக இருக்கிறார். இப்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சண்முகபாண்டியனின் 31வது பிறந்த நாளான நேற்று படைத்தலைவன் படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஒரு சண்டைக்காட்சியில் வருகிறார். சண்முகபாண்டியனை காப்பாற்றும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

ஆனால், நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்த் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடனாக விஜயகாந்த் மகன்களுக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக நடிப்புத்துறையில் நுழைந்து வளரத் துவங்கியிருக்கும் சண்முக பாண்டியனுக்கு அவரது உதவி கண்டிப்பாக தேவை. விஜய், அரசியலுக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கும் முடிவில் இருப்பதால், அவரது 69வது படத்தில், சண்முகபாண்டியனுக்கு ஒரு கேரக்டர் தர முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்