- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னணி நடிகருடன் ஜோடி சேரும் அரிய வாய்ப்பு, தம்பியிடம் நைஸாக சொல்லி தட்டி விட்ட சூப்பர்...

முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் அரிய வாய்ப்பு, தம்பியிடம் நைஸாக சொல்லி தட்டி விட்ட சூப்பர் நடிகை – குமுறலில் குந்தவை திரிஷா

- Advertisement -

நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அதுமட்டுமின்றி இன்னும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இடையில் சில ஆண்டுகள் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அவர் நடிக்கவே வாய்ப்பின்றியும் சில காலம் வீட்டில் இருந்தார். ஆனால் 96 மற்றும் கொடி ஆகிய படங்கள் மீண்டும் அவருக்கு புத்துயிர் தந்தது.

குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது. 40 வயதுகளை கடந்தும் திரிஷாவின் வசீகர அழகில் ரசிகர்கள் மெய் மறந்தனர். உயிர் உங்களுடையது தேவி என வசனம் பேசி அவருக்கு கமெண்ட் செய்தனர். அதனால் மீண்டும் திரிஷாவின் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியது.

- Advertisement -

அடுத்து பொன்னியின் செல்வன் 2ம் பாகமும், அதைத் தொடர்ந்து லியோ படம் வெளியானது. விடாமுயற்சி படத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடித்த திரிஷா, இப்போது தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுடன் 3 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்திலும் திரிஷா இப்போது சைபீரியாவில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனா நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்டர் அட்லி இயக்குகிறார். இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புஷ்பா படத்துக்கு பிறகு இந்திய சினிமா உலகில் வேற லெவலில் இருக்கும் அல்லு அர்ஜூனாவின் புஷ்பா 2ம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து அட்லி டைரக்‌ஷனில், சன் பிக்சர்ஸ் தயாரப்பில் அவர் நடிக்கும் படம், தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

இதற்கிடையே டைரக்டர் அட்லி டைரக்ட் செய்த முந்தைய படங்களான ராஜா ராணி, பிகில், ஜவான் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நயன்தாரா. அவருக்கும் அட்லிக்கும் இடையே ஒரு அக்கா, தம்பி உறவு உள்ளது. அதனால்தான் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைத்து பாலிவுட்டில் கால்பதிக்க உதவினார் அட்லி. ஆனால் சில ஆண்டுகளாக நயன்தாரா மார்க்கெட் டவுனாகி இருப்பதை அட்லியும் அறிந்துதான் இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இயக்குனர் அட்லி இந்த படத்தில் நடிகை திரிஷாவை, அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அது பரவிய நிலையில், தகவலறிந்து திரிஷாவும் உற்சாகமானார். ஆனால் இதையறிந்த நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் எனக்கு எப்போதுமே போட்டி திரிஷா தான். அதனால் இந்த படத்தில் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வையுங்கள் என்று அட்லியிடம் பேசி இருக்கிறார். அவரும் அக்கா பேச்சை மீற முடியாமல் ஓகே சொல்லி விட்டார். ஆனால் சமந்தாவுக்கு உடல் நல பிரச்னை இருப்பதால், பாலிவுட் நாயகி ஆலியாபட்டை நடிக்க வைக்கலாமா என அட்லி ஆலோசித்து வருகிறார். தனது பட வாய்ப்பை நயன்தாரா தட்டி விட்டதால், குந்தவை குமுறிக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்