- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்ததாக பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்... மீண்டும் மீண்டுமா என்று பதறும் ரசிகர்கள்... இவரு இன்னும்...

அடுத்ததாக பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்… மீண்டும் மீண்டுமா என்று பதறும் ரசிகர்கள்… இவரு இன்னும் திருந்தல மாமா..

- Advertisement -

நடிகர் பிரபாஸ் எந்த நேரத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்தாரோ, அன்று முதல் தன்னை இந்தியாவின் செலிப்ரேட்டி என்று நினைத்துக் கொண்டார் போலும் என்று தான் தோன்றுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் அவன் அடித்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவே முடியாது.

சொல்லப்போனால் சாதாரண ஒரு கதையை, தனது திரைக்கதையால் சுவாரஸ்யப்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் பாகுபலி வெற்றி பெறச் செய்த ராஜமௌலி இங்கு பாராட்டத்தவர்களே இருக்க முடியாது. இந்தத் திரைப்படம் கொடுத்த புகழ்ச்சியால், எட்டாத உயரத்திற்கு பறந்தார் நடிகர் பிரபாஸ்.

- Advertisement -

ஆனால், அதன் பிறகு அவர் தேர்வு செய்த திரைப்படங்கள் எதுவுமே சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். சாகோ இன்னும் திரைப்படத்தை அவர் கொடுக்க, அதனைப் பார்த்து ரசிகர்கள் நொந்து போக, தனது அடுத்த திரைப்படமான ராதே ஷ்யாம் படத்திலும் இதனை அவர் தொடர்ந்தார்.

காதல் திரைப்படத்திற்கு எதற்காக இவ்வளவு பெரிய பட்ஜெட் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் அந்த திரைப்படம் இருந்தது. ஆனால் உப்பு சப்பு இல்லாத திரைக்கதையால் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஆதிபுருஷ் படத்தில் அவர் நடித்தார்.

- Advertisement -

ராமாயண வரலாற்றைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானது. சிஜி பணிகள் வெறும் பெயரளவில் மட்டும் இருந்ததால் இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் மறுத்தனர். இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது அவர் கல்கி என்னும் பிரம்மாண்ட படத்தின் நடித்து வருகிறார். இதில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.

இனிமேல் பிரபாஸ் பிரமாண்ட படங்களில் நடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இப்படி இருக்க தற்போது அவர், அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களை இயக்கிய சந்திப் ரெட்டி வங்காவுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஸ்பிரிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் எந்த திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரபாஸ் நடிக்க இருக்கிறாராம். டிசம்பரில் இதன் சூட்டிங் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்