நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு மட்டுமே இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான, கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் பிறகு தனது ஐம்பதாவது திரைப்படமான ராயனில் தனுஷே இயக்கி நடித்தார்.
கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. குறிப்பாக திரைக்கதை மிக சாதாரணமாக இருப்பதாகவும், அண்ணனுக்கு துரோகம் செய்யும் தம்பி என்பது பழைய கான்செப்ட் என்றும் பலரும் கூறினர்.
மிக முக்கியமாக படத்தின் இரண்டாம் பாதி, எந்த ஒரு விதத்திலும் சுவாரசியத்தை கொடுக்கவில்லை என்று பேச்சுகள் எழுந்தன. ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது ராயன் திரைப்படம். இப்படியான சூழலில் தனுஷ் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
குபேரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, சேகர் கமுலா இயக்கி வருகிறார். நாகர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக பணத்தை மையப் புள்ளியாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அதன் பிறகு மாரி செல்வராஜுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக மீண்டும் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். ஏற்கனவே அவரது இயக்கத்தில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் தனது 52 ஆவது படத்தையும் அவரே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார். தேனியில் இதற்கான சூட்டிங் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நித்யா மேனன் கதாநாயகியாக வருகிறார். வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். அசோக் செல்வனுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து dawn என்னும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.





