- Advertisement -
Homeபொழுதுபோக்குபிளான் பண்ணி ஓட்டு போட வந்த நடிகர் அஜித்குமார்; அப்பவும் நெனைச்சபடி நடக்கலையே? - ஓட்டு...

பிளான் பண்ணி ஓட்டு போட வந்த நடிகர் அஜித்குமார்; அப்பவும் நெனைச்சபடி நடக்கலையே? – ஓட்டு சாவடியில் நடந்த தரமான சம்பவம்

- Advertisement -

நடிகர் அஜித்குமார், இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருக்கிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்குமாரை பொறுத்தவரை, பொது இடங்களுக்கு மற்றும் சினிமா விழாக்களுக்கு நேரில் வருவதை தவிர்த்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அங்கு அவருக்கு ரசிகர்களால் ஏற்படும் தொல்லைதான். அவருடன் செல்பி எடுக்கவும், அவரை நெருக்கத்தில் பார்க்கவும், அவரது கை பிடித்துக் குலுக்கவும், அவருடன் பேசவும், ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

- Advertisement -

ஆனால் சில நேரங்களில், ரசிகர்களின் எல்லை மீறிய தொல்லையால், அஜீத் ரசிகர்களை தவிர்க்கிறார். இதனால் பெரும்பாலும் பொது இடங்களுக்கு அவர் வருவதையோ , ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொள்வதையோ அவர் விரும்புவதில்லை. சமீபத்தில், நடிகர் விஜயகாந்த் மறைவின் போது, ரசிகர்கள் தொல்லை இருக்கும் என்ற காரணத்தால்தான் கேப்டன் மறைவிற்கு அவர் நேரில் வரவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு நடந்த நிலையில், தனது இல்லம் உள்ள பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகர் அஜித்குமார் காலை 6 45 மணிக்கே வந்துவிட்டார். வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை கான்வாஸ் ஷூ, கருப்பு கூலிங் கிளாஸ் என செம ஸ்டைலிஷ் ஆக அங்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார் நடிகர் அஜீத்குமார்.

- Advertisement -

காலை ஏழு மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கும் நிலையில், முன்னதாகவே வந்து முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு சென்றுவிடலாம் என்று அஜீத்குமார் அங்கு வந்தார். ஆனால் அவருக்கு முன்னதாகவே அங்கு அஜித்குமார் ஓட்டுப் போட வருவார் என்பதை தெரிந்து கொண்டு காத்திருந்த ரசிகர் கூட்டமும், மீடியாக்களும் அவர் வந்தவுடன் சுற்றி வளைத்துக் கொண்டன.

எனினும் அங்கிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி, அஜித்குமாரை ஓட்டுப் பதிவு அறைக்குள் அழைத்துச் சென்று முதல் ஆளாக ஓட்டு போட அனுமதித்தனர். ஆனால் அங்கு முன்னதாகவே வயதில் மூத்த ஒருவர் காத்திருந்தார்.அஜித்குமார் நீண்ட நேரம் காத்திருந்தால், ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடும் என்பதால், அவரை முதல் ஆளாக ஓட்டு போட அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கிருந்த அந்த முதியவர் வாக்குவாதம் செய்தார். எனினும் அவரை அவர்கள் சமாதானப்படுத்தி, இரண்டாவதாக அந்த வயதான முதியவரை ஓட்டு போட அனுமதித்தனர். முதல் ஆளாக தனது ஓட்டுப்பதிவை செய்துவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றுவிட்டார் நடிகர் அஜித்குமார்.

- Advertisement -

சற்று முன்