தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு அவர் தனது சினிமா பயணத்தில் பொன்விழா ஆண்டை கொண்டாடினார். பாட்ஷா படம் வெளியான 1994ம் ஆண்டு காலகட்டத்திலேயே ரஜினி அரசியலுக்கு வருகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அத்வானி தமிழக அரசியல் தலைவர்கள் மூப்பனர் சிதம்பரம் மற்றும் அரசியல் விமர்சகர் சோ போன்றவர்கள் ரஜினியுடன் நெருக்கமான நட்பில் இருந்தார்கள். ரஜினியை தமிழக முதல்வராக்க அவர்கள் முயற்சித்தனர்.
ஆனால் ரஜினி முற்றிலுமாக மறுத்துவிட்டார். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை என்றும் ஆன்மீகத்தில் தான் முழு நாட்டமும் இருப்பதாக கூறிவிட்டார். மேலும் தமிழக அசெம்ப்ளியில் உட்கார்ந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பேசுவது எல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்றார்.
இதனால் ரஜினியின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமைடந்தனர். அதே நேரத்தில் நன்கு படித்த திறமையான எதிர்கால நலனில் அக்கறை கொண்ட தொலைநோக்கு பார்வையுள்ள இளைஞர் யாராவது அந்த முதல்வர் பதவியில் அமர வேண்டும். அப்படிப்பட்டவரை முதல்வராக உட்கார வைக்க வேண்டும் என்றும் ரஜினி ஏற்கனவே பேசியிருக்கிறார்.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அந்த கட்சியை விட்டு விலகி புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் அதை மறுக்கவில்லை. 2 நாட்களில் அதுபற்றி சொல்கிறேன் என்று மட்டும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அடிக்கடி ரஜினியை நேரில் சந்தித்து பேசக்கூடியவர். அவரும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். ஐபிஎஸ் படித்த இளைஞர். அரசியல் அனுபவசாலி. அந்த வகையில் ரஜினி புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ள அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். அவரது அரசியல் கட்சி துவக்க விழாவிலும் பங்கேற்பார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





