தமிழக முதல்வர் விஜய் திருச்சியில் இன்று நடந்த தவெக கூட்டத்தில் பேசியதாவது, அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கூடாரமாக மாற்றியது யார்? “திமுக இப்படி தோல்வி அடைந்தற்கான காரணத்தை அவர்கள் குடும்பத்திற்குள்ளேயே தலைவர்கள் கேட்க வேண்டும். தொண்டர்கள் உழைக்கின்றனர் திமுக தலைவர்கள் சொகுசாக வாழ்கின்றனர்.
உங்களுக்கு ஓட்டு போடும் போது மக்கள், எனக்கு ஓட்டு போட்டால் வெளி கிரகத்தில் இருந்து வந்தவர்களா? பழைய டெக்னிக்குகளை பயன்படுத்தி என்னையும் மக்களையும் பிரிக்க முடியாது. ஆக்கப்பூர்வ விமர்சனங்களை செய்து மக்கள் மனதை வெல்ல எதிர்கட்சிகள் முயற்சிக்க வேண்டும்.
100யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை. ஜெயலலிதா மேடம் கொடுத்தது. மக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக்கை குளோஸ் செய்துவிட்டேன். ஒரு மாதத்தில் அதிகபட்சம் என்ன முடியுமோ அந்த அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பொய் சொல்லி மக்களை ஏமாற்ற இந்த விஜய் அரசியலுக்கு வரவில்லை. விவசாய பெருமக்களே என்னை நம்பலாம், கவலைப்படாதீர்கள். தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது. போதை கலாச்சாரத்தை துவக்கத்திலேயே திமுக அரசு கிள்ளி எறிந்து இருக்கலாம்.
அடுத்தவாரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவங்க உள்ளது. சிறப்பான காவல் அதிகாரிகளை நியமித்துள்ளோம். தமிழ்நாட்டின் வேரில் வெந்நீரை ஊற்றிச் சென்றுள்ளனர். திமுக தீய சக்தி. இப்போது மக்களை விட்டு தூரமான கட்சியாக மாறிவிட்டது. மற்ற கட்சிகள் தீர்ந்து போன சக்தி. திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைத்து கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் போட்டனர்.
தவெகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து கொள்ளை அடிக்க முயன்றனர். திமுக தீய சக்தி மட்டும் அல்ல மக்களை விட்டு தூரச் சென்ற சக்தி. தீர்ந்து போன சக்தியோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்ற திமுக தூர்ந்து போன சக்தியாகிவிட்டது. மக்கள் நம்முடன் உள்ள போது தவெகவிற்கு எதற்கு பேர அரசியல்? இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை திருச்சி கிழக்கு மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பேசினார்.





