கடந்த 2012ம் ஆண்டில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக மாறினார்.
பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டே என்ட்ரி கொடுத்தார். நெல்சன் திலீப் குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பும் கவர்ச்சியும் நடனமும் பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிஷா பாடலுக்கு அவர் சிறப்பு நடனமாடி ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார்.தொடர்ந்து ஜனநாயகன் படத்திலும் அவர் விஜய்க்கு ஜோடியாக 2வது முறையாக நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, திரை துறையினருக்கு உயிர் தருவது ரசிகர்கள் தான்.
சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை கவனிக்க முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் தலைக்கணம் கொண்டவர்கள் என்று அர்த்தம் இல்லை. ரசிகர்கள் தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுடைய தெய்வங்களை போன்றவர்கள்.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்று பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார். சமீபத்தில் செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் வந்த ரசிகர் ஒருவரை பொருட்படுத்தாமல் பூஜா ஹெக்டே சென்றார். இதை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதற்குதான் நடிகை பூஜா ஹெக்டே இப்படி ஒரு விளக்கத்தை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





