- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பின் போது அந்த மெகா ஸ்டாருடன் சண்டை போட்டது உண்மைதான்... பரபரப்பை கிளப்பிய இயக்குனர் லிங்குசாமி...

படப்பிடிப்பின் போது அந்த மெகா ஸ்டாருடன் சண்டை போட்டது உண்மைதான்… பரபரப்பை கிளப்பிய இயக்குனர் லிங்குசாமி…

- Advertisement -

ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அங்கிருந்து, ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை என கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வெற்றி பெற்றார் இயக்குனர். இந்த நிலையில், லிங்குசாமி இயக்கிய அஞ்சான் திரைப்படம் அந்த நேரத்தில் படுதோல்வியை சந்தித்தது.

 

- Advertisement -

மேலும் சமூக வலைதளத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளான இயக்குனர், சண்டகோழி படத்தின் இரண்டாம் பாகத்தை கொடுத்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பையா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. லிங்குசாமியின் வெற்றி பயணத்திற்கு அடித்தளமிட்டது ஆனந்தம் திரைப்படம் தான்.

 

- Advertisement -

மம்முட்டி, முரளி, அப்பாஸ், ஷியாம், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி திரைப்படமாக இது அமைந்தது. படம் ஆரம்பித்தது முதல், இறுதிவரை ஒரே நேர்கோட்டில் செல்ல பலரும் படத்திற்கு பச்சைக் கொடி காட்டினர்.

 

புதுமுக இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு தரமான படமா என்று, கோலிவுட் திரைப்படமே ஆச்சரியப்பட ரசிகர்கள் மத்தியில் லிங்குசாமி பேசப்பட்டார். அந்த படப்பிடிப்பின் போதே, இயக்குனருக்கும், மெகா ஸ்டார் மம்முட்டிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அது பற்றி பெரிதாக பேசப்படவில்லை. இப்படியான சொல்லில் தற்போது லிங்குசாமி அது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

சமீபத்தில் youtube சேனலுக்கு பேசியிருக்கும் அவர் கூறியிருப்பதாவது, ஆனந்தம் திரைப்படம் எனக்கு முதல் திரைப்படம். அப்போது எனக்கும் மம்முட்டி சாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான். நான் சில காட்சிகளை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில் ரொம்ப பிடிவாதமாக இருந்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது.

 

ஆனால் இப்போதும் நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். சமீபத்தில் பிரம்மயுகம் டிரைலரை பார்த்து அவரிடம் தொலைபேசியில் பேசினேன். சொல்லப்போனால் ஆனந்தம் திரைப்படத்திற்கு பிறகு நானும் அவரும் நெருக்கமாகி விட்டோம். காதல் தி கோர் படத்தை அவர் சமீபத்தில் கொடுத்தார். என்ன மாதிரியான நடிகர் அவர் என்று லிங்குசாமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்