- Advertisement -
நடிகர் அப்புகுட்டி ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவுல இருக்குற எல்லா நடிகர்களும் வசதியானவங்க இல்லை. வெறும் 10 சதவீதம் மட்டும் தான் நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள். நிலையான வருமானம் இல்லாத இந்த துறையில் அவசரப்பட்டு கடன் வாங்கி ஆடம்பரமாக கார் வாங்கி கடனில் மாட்டிக்க வேண்டாம். வட்டிக்கு வாங்கிட்டு ஒவ்வொருத்தரும் படற அவஸ்தையை நாம பார்த்திருப்போம். நானே வாங்கி மாட்டி இருக்கேன். ஒரு முறை காரை அடமானம் வைத்து மாட்டி விட்டேன். அவன் பண்ண டார்ச்சர்ல இனிமே கார் வாங்கவே கூடாதுன்னு ஆயிடுச்சு. இது என் சொந்த அனுபவம் என்று நடிகர் அப்புகுட்டி அதில் கூறியிருக்கிறார்.





