- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க மறுத்த நடிகை பூமிகா, உண்மையில் நடந்தது என்ன? ...

நடிகர் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க மறுத்த நடிகை பூமிகா, உண்மையில் நடந்தது என்ன? பிரதர் பட இயக்குனர் கொடுத்த விளக்கம் – இது உருட்டா, உண்மையான்னு தெரியலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் பிரதர். ஜெயம் ரவியின் முந்தைய படங்களான அகிலன், இறைவன், சைரன் 108 என தோல்விப் படங்களாக இருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தற்போது அவர் மும்பையில் செட்டிலாகி விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கிடையே வரும் தீபாவளிக்கு அவர் நடித்த பிரதர் படம் ரிலீஸ் ஆகிறது.

பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா, டிடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். எம் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் சிவா மனசுல சக்தி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31ம் தேதி தீபாவளியன்று பிரதர் படம் திரைக்கு வருகிறது.

பிரதர் படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது, ஜெயம் ரவியிடம் 3 கதைகள் சொன்னேன். அதில் குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி பிரதர் படத்தை கதையை அவர் தேர்வு செய்தார். இது அக்கா தம்பி பாசத்தைச் சொல்லும் படம். அக்காவாக பூமிகாவும், தம்பியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இருவருக்குமே இந்த படத்தில் சமபங்கு நடிப்பு இருக்கும் வகையில் கேரக்டர்கள் உள்ளது.

ஜெயம் ரவி வக்கீலாகவும், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன் டாக்டராக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சொந்த குரலில் பிரியங்கா மோகன் டப்பிங் பேசியிருக்கிறார். ஜெயம் ரவிக்கு அக்காவாக யாரை நடிக்க வைக்கலாம் என்று உதவி இயக்குனர்களுக்கு போட்டி வைத்தேன். பிறகு அவர்கள் எழுதிக் கொண்டு வந்த எல்லா பெயரையும் படித்தேன். அவர்கள் குறிப்பிடாத நடிகையான பூமிகாவை மும்பைக்கு தேடிச்சென்று கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன்.

ஜெயம் ரவிக்கு அக்காவாக என்னை நடிக்க கேட்பதா என்று பூமிகா என்னிடம் கோபப்பட்டார், முதலில் மறுத்தார், பின்னர்தான் சம்மதித்தார் என்றும் சொல்வதெல்லாம் வதந்தி. முதலில் அவரிடம் ஜெயம் ரவியின் பெயரைச் சொல்லி ஓகே வாங்கிய பிறகுதான், பூமிகாவிடம் கதை சொன்னேன். அவரும் முழு மனதுடன் சம்மதித்தார். எங்கேயும் தன் அக்காவை விட்டுக் கொடுக்காத தம்பியும், தம்பியை எதற்காக விட்டுக் கொடுக்காத அக்காவும் ரசிகர் மனதில் எப்போதும் நிலைத்து நிற்பார்கள், என்று அந்த நேர்காணலில் இயக்குனர் எம் ராஜேஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்