சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட பயணத்தில் மிக மிக முக்கியமான படம் என்றால் அது 1990ல் வெளிவந்த பாட்ஷா படம்தான். இந்த படத்தில்தான் ரஜினிகாந்த் மிகப் பெரிய மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டி அடித்தார் என்றால் அது மிகையல்ல. இப்போதும் கூட பாட்ஷா போல ஒரு படம் பண்ண வேண்டும் என்றுதான் ரஜினிகாந்த ஒவ்வொரு விழா மேடையிலும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அந்த படம்தான் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில், இந்திய அளவில் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றுக் கொடுத்தது என்றால். இந்த படத்தை டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நக்மா, ஜனகராஜ், பத்மபிரியா, ரகுவரன், செண்பகா, யுவராணி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இதில் நடிகர் சரண்ராஜ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ரஜினியின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்தார். இந்த படத்தில் மாணிக் பாட்ஷா என்ற மும்பை தாதாவாக நடித்த ரஜினிக்கு மிகப்பெரிய ஒரு மாஸ் ஏற்படுத்தி கொடுத்த படம் என்றால் அது மிகையல்ல. இந்த படத்தில் ஆனந்தராஜ் நடிப்பு மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி நடித்த அண்ணாமலை, பாபா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சுரேஷ்கிருஷ்ணாவை பொருத்தவரை நல்ல வெற்றி படங்களை கொடுத்த வெற்றி பெற இயக்குனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய வெற்றிப்படங்களின் இயக்குனர்.
கமல் நடித்த சத்யா படத்தில்தான் இயக்குனராக சுரேஷ்கிருஷ்ணா அறிமுகமானார். ராஜா கைய வெச்சா, வீரா, ஆளவந்தான், ரோஜாவை கிள்ளாதே போன்ற முக்கிய படங்களை இயக்கியவர். இந்திரன் சந்திரன் என்ற கமல் இரட்டை வேடத்தில் நடித்த தெலுங்கு படத்தை இயக்கியதும் சுரேஷ் கிருஷ்ணாதான். மும்பையை சேர்ந்த இவர், கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இப்போது சுரேஷ்கிருஷ்ணா, தெலுங்கில் குறைவான பட்ஜெட்டில் ஒரு படம் இயக்குகிறார். அந்தப் படத்தை சினிமா விஷயங்களை உள்ளடக்கிய ஒரு படமாக உருவாக்குகிறார். படத்துக்கு ஹீரோ ஹீரோயின் என பெயர் வைத்துள்ளார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. ரஜினி நடிப்பில் பாட்ஷா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, சின்ன பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை இப்படி ஒரு படம் இயக்குவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





