- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான், ரத்னம் படத்தை கிழித்து தோரணமாக தொங்கவிட்ட ப்ளு சட்டை...

படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான், ரத்னம் படத்தை கிழித்து தோரணமாக தொங்கவிட்ட ப்ளு சட்டை மாறன் – பதிலடி தருவாரா விஷால்?

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில், டைரக்டர் ஹரி இயக்கத்தில் நேற்று ரிலீசான படம் ரத்னம். இந்த படத்தை டைரக்டர் ஹரி, கதாநாயகன் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால், முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் போதிய கூட்டமில்லை என்பதுதான் உண்மை. ரத்னம் படத்தின் முதல்நாள் வசூல் 3 கோடி ரூபாய் வரை ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம் கவின் போன்ற வளரும் நடிகர்கள் நடித்த படங்களே இரண்டு கோடிக்கு மேல் வசூலிக்கும் நிலையில், விஷால் போன்ற இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் ஒரு கதாநாயகன் படத்துக்கு இவ்வளவு சுமாரான ஓப்பனிங் என்பது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

ரத்னம் படத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன், முரளி சர்மா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், படத்தில் சண்டை காட்சிகள் மட்டுமே சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த படத்தில் நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள், சண்டை பயிற்சியாளர்களாக பணி செய்து இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இப்போதெல்லாம் கதாநாயகன்களே இரட்டை வேடங்களில் நடிப்பது குறைந்து வருகின்ற சூழ்நிலையில், இந்த படத்தில் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் ஒருவர் அம்மாவாகவும் ஒருவர் காதலியாகவும் நடித்துள்ள நிலையில், அம்மாவை காதலிக்கும் விஷால் கேரக்டரை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.

ரத்னம் படம் குறித்து ப்ளு சட்டைமாறன் தனது விமர்சனத்தில், இந்த படத்தில் சண்டை காட்சிகள் மட்டுமே பாராட்டும்படி இருக்கிறது. ஆனால் ஜவ்வு போல படம் இழுத்துக் கொண்டே போகிறது. படம் ஒரு கட்டத்தில் மிகவும் போர் அடிக்கிறது. குறிப்பாக விஷாலுக்கு ஜோடியாகவும், விஷாலுக்கு அம்மாவாகவும் நடிகை பிரியா பவானி சங்கர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது இந்த படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.

படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குனர் ஹரி சொதப்பிவிட்டார். மேலும் இந்த படம் எங்கேயும் சுவாரசியமாகவே இல்லை. யாராவது அம்மாவை போய் காதலிப்பார்களா, அதே பெரிய தப்பாக இருக்கிறது என்றும், ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் ஆண்டனி, ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு பதில் தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் விஷால் பிரஸ்மீட்டில் பயில்வான் ரங்கநாதனை திட்டிப் பேசிய நிலையில், ப்ளு சட்டை மாறனுக்கும் பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்