- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷாதான் டாப், நயன்தாரா அவ்வளவுதான்- வாய்விட்டு மாட்டிக்கொண்ட மூத்த பத்திரிக்கையாளர்

திரிஷாதான் டாப், நயன்தாரா அவ்வளவுதான்- வாய்விட்டு மாட்டிக்கொண்ட மூத்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக வலம் வரும் திரிஷா தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். “ஜோடி” திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான திரிஷா “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வலம் வந்த திரிஷா, தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட குந்தவை கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது திரிஷா விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படத்திலும் திரிஷாதான் கதாநாயகி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், நயன்தாரா குறித்து பேசியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அப்பேட்டியில் பேசிய அவர், “தற்போது கதாநாயகிகளுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது லிஸ்ட் போட்டால் திரிஷாவை தவிர வேறு யாருமே இல்லை. திரிஷாவோடு நடித்த பல நடிகைகள் தற்போது ரிட்டயர் ஆகிவிட்டார்கள். காஜல் அகர்வா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற யாருமே இப்போது இல்லை” என கூறினார்.

அப்போது நிருபர் இடைமறித்து, “நயன்தாரா கிடையாதா சார்?” என அழுத்தி கேட்டார். அதற்கு அந்தணன், “இப்போதைக்கு நயன்தாரா நடிக்கவில்லையே. பின்னாளில் திரிஷாவை போல் கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கு” என கூறினார். அந்தணனின் இந்த பேட்டியால் நயன்தாரா ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.

- Advertisement -

நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து “டெஸ்ட்” என்ற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்