அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் இப்போது பலரது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த திரைப்படம் வெளியாகி இருந்ததால் அதன் மீது பலரும் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
ஆனால் படத்தின் தொய்வான திரைக்கதையும், அஜித் குமாருக்கு எந்த மாஸ் காட்சிகள் இல்லாததும் அந்த திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் போய்விட்டது. இப்படியான சூழலில், குட் பேட் அக்லியில் பல மாஸ் காட்சிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் அது திரைத்துறையில் பேசு பொருளாகி இருக்கிறது.
இதில் அஜித் குமாரின் தோற்றமே பலரும் வியக்கும் அளவுக்கு உள்ளது. இளைஞர் கதாபாத்திரம், நடுத்தர வயது என அவரின் ஒவ்வொரு லுக்குகளுக்கும் இணையத்தில் லைக்குகள் தெறிக்க விடப்பட்டன. கையில் துப்பாக்கியுடன் கலர் கலர் கண்ணாடிகளை அணிந்து அவர் காட்சியளிக்கிறார்.
நிச்சயமாக வேறு எந்த திரைப்படத்திலும் காணாத அஜித்குமாரை இதில் காணலாம் என்று அப்போதே சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தார்கள். இந்தத் திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. அவருக்கு ரம்யா எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக தெலுங்கு நடிகர் சுனில், பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். மைத்ரி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். அதேசமயம் பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதேசமயம் வரும் 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது. அதன் அறிவிப்பு வீடியோவை தற்போது வைரலாகி வரும் நிலையில் படம் குறித்த தகவல் ஒன்று கசிந்து உள்ளது. அதாவது, குட் பேட் அக்லி கேங்ஸ்டர் திரைப்படம் தான் என்பது உறுதியாகிவிட்டாலும், பணத்தை கொள்ளையடிப்பது தான் இதன் மையக்கரு என்று பலரும் கூறி வருகிறார்கள். இதனை எவ்வளவு சுவாரசியமாக ஆதிக் ரவிச்சந்திரன் காட்டியிருக்கப் போகிறார் என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக இருக்கிறது.





