- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்தை தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா? - ...

ரஜினி படத்தை தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா? – போடு வெடிய, மாஸான சம்பவமா இருக்கே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் வேட்டையன் ரஜினியின் 170 வது படம். இந்த படத்தை டைரக்டர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார் ஜெய் பீம் போன்ற படத்தை தந்த தசெ ஞானவேல் இயக்கும் இந்த வேட்டையன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கமர்சியல் டைரக்டராக மசாலா நடிகர் ரஜினிகாந்தை, எப்படி அவர் காட்டப் போகிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில், பெரிய ஆர்வத்தை தந்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை கமிட் செய்வதற்கு முன்பாக, இந்த படத்தில் வேறொரு தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க தசெ ஞானவேல் முடிவு செய்திருந்தார். அதற்காக அந்த நடிகரை நேரில் சந்தித்து பேசிய போது, அவருக்கு அந்த கேரக்டர் பிடித்திருந்தாலும், குறிப்பிட்ட தேதியும் கால்ஷீட் தர முடியாத சூழலால், அவரால் வேட்டையன் படத்தில் நடிக்க இயலாமல் போனது.

- Advertisement -

அதன் பிறகு வேட்டையன் படத்தில், அந்த கேரக்டரில் ராணா டகுபதி, கமிட் ஆகி அந்த நடிகருக்கு பதிலாக இவர் நடித்துள்ளார். வேட்டையன் படத்தை இன்னும் சில வாரங்களில் முடிக்க உள்ள நிலையில், அடுத்து தசெ ஞானவேல் இயக்கும் படம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகளிலும் இப்போதே ஈடுபட துவங்கி விட்டார். படத்தின் ஹீரோ யார் என்ற தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வேட்டையன் படத்தில் நடிக்குமாறு, தசெ ஞானவேல் முதலில் சென்று பேசியது தெலுங்கு மாஸ் ஹீரோக்களில் ஒருவரான நானி தான். அவர்தான் அவரது இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். வேட்டையன் படத்துக்காக அவரிடம் பேச போன போது, அவர் இந்த படத்தில் நடிக்க இயலாது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அப்போது அவருக்கான வேறு ஒரு கதையை ஞானவேல், கூறியிருக்கிறார். அந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துப் போனதால், வேட்டையன் படத்தை முடித்துவிட்டு சொல்லுங்கள், நாம் அடுத்த படம் பண்ணலாம் என்று நானி அப்போதே உறுதிமொழி கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து இப்போது தசெ ஞானவேல் இயக்கும் படத்தில் நானி நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருந்ததால், அவர் உடனுக்குடனே ஓகே சொல்லி இருக்கிறார். எனவே வேட்டையன் படம் முடிவடைய இருப்பதால், தனது அடுத்த படத்துக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார் தசெ ஞானவேல் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்