நடிகர் தனுஷ்தான், ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தார். மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதற்கு முன்பாகவே 3 என்ற படத்தில் தனுஷூக்கு நண்பராக நடித்திருந்தார். அதன்பிறகு எதிர்நீச்சல் படத்தில், சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடல் காட்சியில் கேமியோ ரோலில் தோன்றி நயன்தாராவுடன் குத்தாட்டமும் போட்டார்.
நடிகர் தனுஷூக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து கோலிவுட் வட்டாரமே வியந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷ் ரசிகர்களை, சிவகார்த்திகேயன் வளைத்து போட்டார். பேமிலி ஆடியன்ஸ் எஸ்கே பக்கம் மொத்தமாக சாய்ந்தது.
அதுமட்டுமின்றி குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் என முதல் வரிசை டாப் ஸ்டார் நடிகர்களுக்கு அடுத்த 2வது வரிசைக்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார். இது பெரிய அளவில் தனுஷூக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில் போட்டியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படம் டிராப் ஆகி விட்டது. கதை, திரைக்கதையில் சூர்யாவின் குறுக்கீடு அதிகமாக இருந்ததும், கதையில் அவர் பல திருத்தங்களும், மாற்றங்களும் சொன்னதால் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய வேண்டாம் என்ற முடிவுக்கு சுதா கொங்கரா முடிவு செய்ததால், அந்த படமே டிராப் ஆகி விட்டது.
இந்த படம், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது அரசியல் சார்ந்த படமாக இருப்பதால் இதில் நடிப்பது, தன்னை பாதிக்குமோ என பயந்துதான் சூர்யா அந்த படத்தின் கதையில் மாற்றம் செய்ய வலியுறுத்தி உள்ளார். அதற்கு சுதா கொங்கரா சம்மதிக்கவில்லை.
இப்போது இந்த கதையில் நடிக்க தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்கும் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. எனினும் இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தை அழைத்து, கதையின் ஒரு லைனை சொல்லி, இதில் நான் நடிக்கலாமா, அரசியல்ரீதியாக எதுவும் பின்விளைவுகள் வருமா என கேட்டிருக்கிறார். அதற்கு பலரும் நடியுங்கள், என்றுதான் கூறியுள்ளனர். எனினும் தனுஷ் அதிகமாக யோசிப்பதால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. இது மிக முக்கிய படம் என்பதால், அப்படி வாய்ப்பு கிடைத்தால் அது சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது.





