- Advertisement -
Homeபொழுதுபோக்கு"காவலா" பாடலை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த மாஸ் அறிவிப்பை வெளியிட்ட -...

“காவலா” பாடலை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த மாஸ் அறிவிப்பை வெளியிட்ட – ராக் ஸ்டார் அனிருத்

- Advertisement -

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படும் நெல்சன் திலீப்குமார் சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து “கோலமாவு கோகிலா” என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் டைரக்டராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த 2022-ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இப்படி மூன்று படத்தை இயக்கிய வேளையிலேயே இவருக்கு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால் என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அண்மையில் நடைபெற்று முடிந்த ஜெயிலர் படப்பிடிப்பினை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ்-சுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “காவலா” பாடல் கடந்த வாரம் 6-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. தற்போது திரும்பும் இடமெல்லாம் “காவலா” பாடலை வைத்து ரசிகர்கள் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் பட்டி தொட்டி பட்டையை கிளப்பி வரும் இந்த காவலா பாடலுக்கு அடுத்து இரண்டாவது சிங்கள இன்று ஜூலை 13-ஆம் தேதி 6 மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் இன்று வெளியாக வேண்டிய அந்த இரண்டாவது சிங்கிள் வெளியாகவில்லை. அதனை அடுத்து தற்போது அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் “இரண்டாவது சிங்கிள் 17ஆம் தேதி” வெளியாக உள்ளது என்று ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் ஒன்றினை வழங்கி உள்ளார். அந்த அப்டேட்டில் ரஜினி “ஹக்கும் டைகர் கா ஹக்கும்” என சொல்லும் படி இருக்கும் வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்