தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஆர்த்தி. பிறகு பல படங்களில் காமெடி கேரக்டரில் ஆர்த்தி கணேஷ் நடித்து வருகிறார். சில படங்களில் அவர் வடிவேலு விவேக் ஆகியோருடன் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். தற்போது ஆர்த்தி கணேஷ் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆர்த்தி பேசியதாவது, நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு இன்று முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒருவர் ஆசைப்படுகிறார்.
அவர் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடன் நான் மூன்று படங்களில் நடித்துள்ளேன் என்பதால் உங்களை விட எனக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். அவரைப் போல நடனமாட யாராலும் முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் டான்ஸ் ஆட முடியுமா? அப்படி டான்ஸ் ஆடினால் நம்ம நிலைமை என்னவாகும்?
சினிமா சூட்டிங் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்குள் முடிவடையும். ஆனால் அரசியல் அப்படி அல்ல. அது முழு நேர பொறுப்பும் தொடர்ச்சியான செயல்பாடும் கொண்டது. 3 மணிக்கு வந்துவிட்டு 6 மணிக்கு வீட்டுக்கு செல்வது அரசியல் அல்ல. சூட்டிங் என நினைத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் அவர் வெளியவே வருவதில்லை.
ஒரு படத்தில் கவுண்டமணிக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அது மாலைக்கண் நோயாக இருக்கும். அதுபோல இவருக்கு ஏதாவது பிரச்சனை இருக்குதா என்று தெரியவில்லை. யாரிடமும் அவர் பேச மாட்டார். ஆனால் முகத்தைப் பார்த்து மட்டும் ஓட்டுப் பாடுங்கள் என்று கேட்பதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என நடிகை ஆர்த்தி கணேஷ் பேசியிருக்கிறார்.
சட்டசபை தேர்தல் நேரம் வந்துவிட்டாலே படங்களில் வாய்ப்பில்லாத இதுபோன்ற துணை நடிகர் நடிகைகள் தினசரி வருமானத்துக்காக தேர்தல் பிரசாரத்துக்கு வந்து விடுகின்றனர். எப்படியாவது கட்சி தலைவர்களை விமர்சித்து பேசி கல்லா கட்டி விட்டு பிறகு காணாமல் போய்விடுகின்றனர். மக்கள் கொண்டாடும் ஒரு தலைவர் விஜயை விமர்சிக்க காமெடி நடிகை ஆர்த்திக்கு என்ற தகுதி இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.





