நடிகர் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி கடந்த 15ம் தேதி வெளியான படம் தங்கலான். இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கர்நாடகா மாநிலத்தில் தங்க வயலில் வேலை பார்த்த கொத்தடிமைகள் பற்றிய கதை இது.
இந்த படத்தில் பழங்குடியின தலைவனாக தங்கலான் கேரக்டரில் சியான் விக்ரம் நடித்துள்ளார். அவரது மனைவியாக பார்வதி, ரவிக்கை அணியாமல் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் வித்யாசமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார்.
தங்கலான் படத்தை பொருத்த வரை, விக்ரம் நடிப்பும் ஜிவி பிரகாஷ் குமார் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றன. அதே நேரத்தில் படத்தின் கதை, திரைக்கதை மிகவும் பலவீனமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. பா ரஞ்சித் சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு தன் அறிவாளித்தனத்தை காட்டியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் கலாய்க்கின்றனர்.
ஒரு தரப்பு ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது, ஒரு தரப்பு ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்ற நிலையில் கலவையான விமர்சனமே படத்துக்கு கிடைத்து வருகிறது. கடந்த 15ம் தேதி தங்கலான் ஒரு நாள் வசூல் நிலவரமாக ரூ. 26.44 கோடி வசூலித்திருக்கிறது. இது எதிர்பார்த்ததை விட குறைவுதான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்கிடையே ஐதராபாத்தில் தங்கலான் நன்றி அறிவிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அந்த விழாவில் ரசிகர்கள் மத்தியில் தெலுங்கில் பேசினார் விக்ரம்.
அப்போது விக்ரம், இந்த விழாவில் பேசும்போது ஒரு விஷயத்தை சொல்லுமாறு இயக்குனர் பா ரஞ்சித் என்னிடம் சொன்னார். அதாவது தங்கலான் படம் உங்களுக்கு ( ரசிகர்களுக்கு) பிடித்திருப்பதால் நான், டைரக்டர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகிய மூன்று பேரும் தங்கலான் 2ம் பாகத்தை எடுக்க இருக்கிறோம், என்று கூறியிருக்கிறார். வெளியான தங்கலானுக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில், இந்த சீன் எதற்கு விக்ரம் சார் என, ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





