- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் அதிரடி முடிவெடுத்த சூப்பர் ஸ்டார்; இனிமேல் அந்த வேலை என்கிட்ட வச்சிக்காதீங்க -...

அந்த விஷயத்தில் அதிரடி முடிவெடுத்த சூப்பர் ஸ்டார்; இனிமேல் அந்த வேலை என்கிட்ட வச்சிக்காதீங்க – ஸ்ட்ரிக்ட் ஆர்டரால் கலங்கிய மகள்கள்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 45 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 73 வயதிலும் இப்போதும் அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவரது படங்கள், பெரிய அளவில் வெற்றி பெற்று மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது டைரக்டர் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

ரஜினிகாந்த் மாஸ் காட்டிய டீசரில், இளையராஜா தனது இசையை பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் படத்தின் பெயரை காப்பியடித்ததோடு, டீசரில் இடம்பெற்ற வசனங்களையும் காப்பி அடித்திருக்கிறார் என்று லோகேஷ் கனகராஜ் கடுமையான விமர்சனத்தில் சிக்கி இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகன்களுக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை போட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே வள்ளி படத்தில் கேமியோ ரோலில் நடித்து அந்த படம் ஓடவில்லை. அதன் பிறகு சிறப்பு தோற்றத்தில் நடித்த குசேலன் படமும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திலும் ரஜினி கேமியோ ரோலில் நடித்த நிலையில் படமும் ஓடவில்லை.

இப்படி தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள், ஓடாமல் ஏமாற்றம் தருவது ரஜினிக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் என்ற கார்ட்டூன் படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த படத்தை தயாரித்த வகையில், ரஜினிக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிட்டது.

இப்படி தனது இரண்டு மகள்களும் தன்னை நடிக்க வைத்து, நான் தன்னுடைய இமேஜை கெடுத்து விடுவதோடு, தனது பணத்தையும் வீணடிக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் நொந்து போயிருக்கிறார். இனிமேல் சௌந்தர்யா, ஐஸ்வர்யா இருவருமே என்னை படத்தில் நடிக்க அழைக்கக்கூடாது. நான் உங்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் முதலில் தொழில், பிறகுதான் குடும்பம். தொழிலில் நான் எப்போதும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்க வேண்டும். உங்கள் படங்களில் நடித்து நான் தோல்வி கண்டால், அது நான் நடிக்கும் படங்களை வெகுவாக பாதிக்கும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

சற்று முன்