- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பத்தில் திலீப் ஆக இருந்த இளைஞர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆக மாறியது எப்போது? இதுதான்...

ஆரம்பத்தில் திலீப் ஆக இருந்த இளைஞர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆக மாறியது எப்போது? இதுதான் அந்த தரமான சம்பவம்!

- Advertisement -

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இயற்பெயர் திலீப். ரோஜா படத்துக்கு இசையமைக்கும் வரை அப்படிதான் குடும்பத்தினர் உள்பட அனைவரும் திலீப் என்றே அவரை அழைத்தனர். ரோஜா படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு முதலில் திலீப் என்ற பெயரில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அப்போது திடீர் என்று திலீப்பின் அம்மா தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது பெரியவங்க சொன்னதாக சொல்லி ஏ ஆர் ரகுமான் என மாற்றி பெயர் வைக்குமாறு சொல்லி இருக்கிறார். உடனே பிரமிட் நடராஜனும் அடித்த பத்திரிகைகளை எல்லாம் மாற்றி இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் என பெயர் அச்சடித்து ரிலீஸ் பண்ணி இருக்கிறார். இப்படி தான் ரோஜா படத்தில் திலீப் என்ற பெயர் மாற்றப்பட்டு இசைப்புயல் ஏஆர் ரகுமான் பெயர் உருவானதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்