- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைப் படத்தில் சிம்பு நடிக்க பின்னணியில் இப்படி ஒரு காரணமா? கெட்ச் போட்டு தூக்கிய ஆண்டவர்...

தக்லைப் படத்தில் சிம்பு நடிக்க பின்னணியில் இப்படி ஒரு காரணமா? கெட்ச் போட்டு தூக்கிய ஆண்டவர் – ஆனால் ஜெயம் ரவியை காலி பண்ணிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் முதலில் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் மணிரத்னம், ஜெயம் ரவி துல்கர் சல்மான் ஆகியோரை சரியாக கண்டு கொள்ளாமல் அவர்களுக்கான கால்ஷீட் தேதியை குறிப்பிட்டு சொல்லாமல் சம்பள விவரங்களை பேசாமல், கேரக்டர் என்ன என்று கூட சொல்லாமல் அவர்களை மாதக்கணக்கில் காத்திருக்க வைத்தார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுத்து பொறுத்து பார்த்த துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் இவ்வளவு அவமானப்பட்டு இந்த படத்தில் நடிக்க தான் வேண்டுமா என்ற ஒரு முடிவுக்கு வந்து, இருவருமே தக்லைப் படத்திலிருந்து அடுத்தடுத்து விலகினர். அதிலும் குறிப்பாக பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி பட நாயகனான மலையாள நடிகர் துல்கர் சல்மான், மணிரத்னம் படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டு வந்தார். ஆனால் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தால் தக்லைப் படம் வேண்டாம் என்று விலகி விட்டார்.

- Advertisement -

அதேபோல் ஜெயம் ரவியும் தொடர்ந்து, இரண்டு முறை ஒரு மாதம் ஒரு மாதம் என கால்ஷீட் கொடுத்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த இரண்டு மாதங்களையும் வேண்டாம் என ஒதுக்கி, இரண்டு மாதங்களை விரயமாக்கியதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு தந்தார் என்பதற்காக இப்படி ஒரு அவமானத்தை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவில் அவரும் தக்லைப் படத்தை விட்டு வெளியேறினார்.

ஜெயம் ரவி நடிக்க வேண்டியகேரக்டரில், இப்போது அசோக் செல்வன் நடிக்க இருக்கிறார். துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் தக்லைப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலக மற்றொரு முக்கிய காரணம், சிம்பு நடிக்க வந்ததுதான். ஏனெனில் சிலம்பரசன் நடிக்கும் படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவெடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

- Advertisement -

அதே நேரத்தில், தக்லைப் படத்தில் சிம்பு நடிப்பதற்கான பின்னணி காரணம் ஒன்று இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக பல மாதங்களாக ப்ரீ புரடக்சன் பணிகளும் நடப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த படத்தை இப்போது எடுக்க கமல் தயாராக இல்லை. ஏனெனில் ஓடிடி நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் ரைட்ஸ் விலையை கணிசமாக குறைத்து விட்டன. சேட்டிலைட் உரிமங்களும் முன்பு பல மடங்கு இருந்ததை இப்போது பன்மடங்கு குறைத்துவிட்டன. இந்த சூழ்நிலையில் பெரிய பட்ஜெட்டில் சிலம்பரசனை வைத்து படம் எடுப்பது அவ்வளவு சரியல்ல. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட நடிகர் கமல், ஏற்கனவே சிலம்பரசனுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வைத்து, தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்கு பதிலாக, தக்லைப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்த பிளானில், ஜெயம் ரவிதான் பலியாடு ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்