- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா... ஆச்சரியத்தில் அண்ணாந்து...

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா… ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்க்கும் கோலிவுட் திரையுலகம்….

- Advertisement -

கடந்த ஒன்றாம் தேதி தமிழ் சினிமாவில் இருந்து இரண்டு முக்கியமான திரைப்படங்கள் வெளியாகின. ஒன்று சூர்யா நடிப்பில் எடுக்கப்பட்ட ரெட்ரோ திரைப்படம். மற்றொன்று சசிகுமார் சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம். ஆரம்பத்தில் ரெட்ரோ திரைப்படத்தின் மீதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா முதல் முறையாக கைகோர்த்து இருந்ததால், அந்த திரைப்படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் இரண்டாம் பாதி வேறு ஒரு கோணத்தில் சென்றதால் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை ஏற்பட்டது. அதேசமயம் ரெட்ரோ திரைப்படம் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

- Advertisement -

திரையரங்குகள், ஓடிடி உரிமம், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமம் என ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 235 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி இருந்தபோது அது பரபரப்பாக பேசப்பட்டது.

மிகவும் நகைச்சுவை கலந்த வகையில் அந்த டீசர் எடுக்கப்பட்டிருந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடி பெயர்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அப்போதே ரசிகர்களுக்கு இது எந்த மாதிரியான திரைப்படம் என்பது தெரிந்து விட்டது. அந்த பயணத்தை சரியாக தக்க வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இலங்கையிலிருந்து ஒரு குடும்பம் ராமேஸ்வரம் வருகிறது. அப்போது அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ, அதற்கு குடிபெயர்ந்த குடும்பம் தான் காரணம் என சந்திக்கிறார்கள். இந்த ஒன் லைனை மையப்படுத்தியே இந்த கதையை அற்புதமாக எழுதி இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறிவிட்டது.

சிம்ரன் உள்ளிட்ட பலரும் தங்களது திறனை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக சசிகுமாரின் இளைய மகன் கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல விமர்சனத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்