- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் தள்ளி போவதற்கு இவர் தான் காரணமா... இது தெரியாம இவ்வளவு...

விடுதலை இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் தள்ளி போவதற்கு இவர் தான் காரணமா… இது தெரியாம இவ்வளவு நாள் வெற்றிமாறனை திட்டிட்டோமே….

- Advertisement -

பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அங்கிருந்து தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய அவர், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுப்பதாக இருந்தது.

 

- Advertisement -

இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாகவும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இயக்குனர் மற்றும் நடிகருக்கு இடையே சரியான தேதி அமையாததால் வாடிவாசல் திரைப்படம் தற்போது வரை தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

 

- Advertisement -

இதன் நடுவே ஒரு சிறிய பட்ஜெட் படத்தை எடுக்க இயக்குனர் வெற்றி மாறன் முடிவு செய்தார். இப்படியாகத்தான் உருவானது விடுதலை திரைப்படம். இந்தப் படத்தில் மையக் கருவே வாத்தியார் பெருமாள் என்ற கதாபாத்திரத்தை சுற்றி தான் நகரும். அந்த கேரக்டரில் முதலில் பாரதிராஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன்.

 

ஆனால் அடர்ந்த வனப் பகுதிகளில் சில சவாலான காட்சிகளின் நடிக்க வேண்டும் என்பதால், பாரதிராஜாவுக்கு பதில் விஜய் சேதுபதியை வெற்றிமாறன் தேர்ந்தெடுத்தார். சிறிய பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் இதன் சூட்டிங் நடத்த திட்டமிட்ட வெற்றிமாறன், சூரிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். இப்படியான சூழலில், விடுதலை திரைப்படத்தின் அத்தனை திட்டமும் தலைகீழாய் மாறியது.

 

படத்தை விரிவாக எடுக்க முடிவு செய்த வெற்றிமாறன், முதல் பாகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டார். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விரைவில் இதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை படக்குழுவினர் சூட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

 

தற்போது தென்காசியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து நெல்லையில் பேட்டி அளித்த வெற்றிமாறன், இன்னும் 20 நாட்கள் சூட்டிங் இருப்பதாக கூறினார். விஜய் சேதுபதி போர்ஷன் மட்டுமே மீதி இருக்க, அவர் இப்போது வரை படத்தில் இணையவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாலும், கால் சீட் பிரச்சினை காரணத்தினாலும் இந்த சிக்கல் தொடர்வதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வந்தால் மட்டுமே விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முடியும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

சற்று முன்