நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதலில் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்துப் போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கிறது கங்குவா திரைப்படம். இதனை அந்தப் படத்தின் நாயகன் சூர்யாவே அறிவித்தார்.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 44-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. முதலில் அவர் சுதா கொங்கராவுடன் இணைந்து பணியாற்றுவதாக தான் இருந்தது.
இதற்குப் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியாகிறது. ஆனால் திடீரென படத்தின் பணியில் இருந்து சூர்யா விலகினார். பருத்திவீரன் படம் தொடர்பான சர்ச்சையில், சூர்யாவின் தரப்பான ஞானவேல் ராஜாவுக்கும் அமீர் தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் எழுந்தது. இதில் அமீர் தரப்புக்கு ஆதரவாக சுதா கொங்கரா சில கருத்துக்களை கூறியிருந்தார்.
இதன் காரணமாகத்தான் சூர்யா புறநானூறு திரைப்படத்திலிருந்து ஒதுங்கியதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனிடையே, கார்த்திக் சுப்புராஜூ உடன் அவர் நடித்து வரும் திரைப்படத்திற்கான பணிகள் சூடு பிடித்துள்ளன. முதலில் அந்தமானில் இதன் சூட்டிங் நடைபெற்றது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
அதுபோக, கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் உள்ளனர். இந்தப் படத்தில் ஜெயராம் நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில் தற்போது அவரது மகன் காளிதாசும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தந்தையும் மகனுமான இவர்கள் இருவரும் ஏற்கனவே தனித்தனியாக சில திரைப்படங்களின் நடித்திருந்தாலும், தற்போது தான் ஒரே திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





