- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம்ரவி விலகலுக்கு சிம்பு மட்டுமே காரணம் அல்ல - நாயன்மாரே…...

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம்ரவி விலகலுக்கு சிம்பு மட்டுமே காரணம் அல்ல – நாயன்மாரே… இது நியாயம்தானா?

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் படத்தில் தக்லைப் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் பிரதான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்த படத்தில் முதலில் ஜெயம் ரவியும், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிக்க கமிட் ஆகியிருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் துல்கர் சல்மான் இந்த படத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு சில நாட்களில் ஜெயம் ரவியும் தக்லைப் படத்தில் இருந்து விலகினார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் இந்திய அளவில் மதிக்கப்படும் ஒரு சிறந்த இயக்குனராக மணிரத்னம் உள்ளார். அவரது படங்களில் நடிப்பதை பலரும் பெரும் பாக்கியமாக, பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். அப்படி இருக்கும் போது துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் இப்படி படத்தில் கமிட் ஆகி விட்டு விலகியது, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாத பேச்சாக மாறியது.

இதனால் தனது கணவர் மணிரத்னத்துக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக நடிகை சுகாசினி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரிடமும் சமாதானப் பேச்சு நடத்தியும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து சிலம்பரசனும், அசோக் செல்வனும் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

துவக்கத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல்தான் ஜெயம் ரவி, தக்லைப் படத்தில் இருந்து விலகியதாக தகவல் பரவியது. அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி வெறுத்துப்போய் வெளியேற மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, பல கோடிகளில் கணிசமான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக ஜெயம் ரவி இருக்கிறார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியை கமிட் செய்த போது, மணிரத்னம் 4 முக்கிய கேரக்டர்களில் நீயும் ஒருவன் என்று கூறி, அவரது வழக்கமான சம்பளத்தில் பாதியை குறைத்துள்ளார். இப்போது தக்லைப் படத்துக்காக கமிட் ஆன போது, முன்பு தந்ததை விட மேலும் பாதியாக சம்பளத்தை குறைத்துள்ளார். இப்படி அடிமாட்டு விலைக்கு தன் சம்பளத்தை குறைத்து வெறுப்பேற்றியதால், மணிரத்னம் படத்தில் இருந்து உடனடியாக விலகியிருக்கிறார் ஜெயம் ரவி.

சற்று முன்