- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ பஞ்சாயத்துக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் - இயக்குநர்...

லியோ பஞ்சாயத்துக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கோர்ட் நோட்டீஸ்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ.இந்த படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் 600 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டாலும், சினிமா ரசிகர்களை பொருத்த வரை இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்த படமாகவே இருந்தது. விஜய் ரசிகர்களில் பலருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை படம் ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்தினாலும், இடைவேளைக்கு பிறகு வரும் 2ம் பாகம், தியேட்டருக்குள் இருந்தவர்களை, ஆளை விட்டால் போதும்டா சாமி என்று கெஞ்சும் அளவுக்கு மெகா சொதப்பலாக இருந்தது.

- Advertisement -

அதுவும் இரட்டை சகோதரன், சகோதரி, நரபலி, கிளைமாக்ஸில் 200, 300 அடியாட்களை அடித்து துவம்சம் செய்யும் விஜய் என, படம் பார்ப்பவர்களை லாஜிக்கே இல்லாமல் திணறடித்து, கதறடித்தவர் லோகேஷ் கனகராஜ் என்றால் அது மிகையல்ல.

டிரக் ப்ரீ சொசைட்டியை உருவாக்க படம் எடுக்கிறேன் என கூறும் இவரது படங்களால்தான், தமிழகமே போதை சமுதாயமாக மாறிவிடுமோ என்ற அச்சப்படும் நிலை ஏற்பட்டுளளது. ஏனென்றால், போதை பொருட்கள் இல்லாத ஒரு படத்தை, கதையை இவரால் யோசிக்கவே முடியாது. கைதி, விக்ரம், லியோ, மாஸ்டர் என இவரது படங்கள் எல்லாமே போதை பொருட்கள் கடத்தல், பயன்பாடு மையப்படுத்திய படங்கள்தான்.

- Advertisement -

குறிப்பாக இவரது படங்களில் இருக்கும் வன்முறை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கத்தி, துப்பாக்கி, ரத்தம், சத்தம், வன்முறை, கலவரம்தான் இவரது படங்களின் ஹைலைட். படத்தின் மையக்கரு போதைப்பொருள். இதுதான் லோகேஷ் கனகராஜ் படம்.

தொடர்ந்து இதுபோன்ற வன்முறை படங்களை எடுத்து, சமுதாயத்தை கெடுக்கும் நோக்கில் செயல்படும் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் சோதனை செய்ய வேண்டும். அவரது லியோ படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில், வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து விளக்கம் அளிக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜூக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்