- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த புகைப்படத்தால் இப்படி ஒரு பிரச்னை ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏன் இப்படி தப்பா...

அந்த புகைப்படத்தால் இப்படி ஒரு பிரச்னை ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏன் இப்படி தப்பா பேசறாங்க? – வருத்தப்பட்ட நடிகை சுகன்யா

- Advertisement -

நடிகை சுகன்யா, தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய நடிகையாக இருந்தவர். குறிப்பாக 1990களில் சுகன்யாவை லட்டு மூக்கழகி என்று வர்ணித்தனர். ரஜினி ஒருவரை தவிர கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சுகன்யா.

குறிப்பாக சின்னக்கவுண்டர், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல், சின்ன மாப்ளே, மகாநதி, இந்தியன் படங்களில் சுகன்யா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா, திருமணமாகி அமொிக்காவில் செட்டிலானார். ஆனால் ஒரே ஆண்டில் கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழி படங்களிலும் சுகன்யா நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அவர் படங்களில் நடிப்பது வெகுவாக குறைந்து போனது. அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் சுகன்யா நடித்தார். இப்போது, சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சுகன்யா பரதநாட்டிய கலைஞர். நல்ல குரல் வளம் மிக்கவர். கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். டப்பிங் பேசுவதிலும் சுகன்யா வல்லவராக இருக்கிறார். நான் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கவில்லை. எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வராததால் நடிக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இப்போது சுகன்யா மகள் என, சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சுகன்யா வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய மகள் என்று சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படத்தில் இருப்பது என் மகள் அல்ல, என்னுடைய அக்கா மகள்தான். முழு தகவலுடன்தான் இந்த புகைப்படத்தை நான் டிவிட்டரில் பதிவு செய்தேன்.

ஆனால் எனது அக்கா மகளை, என் மகள் என்றே தவறாக பதிவு செய்து வருகிறார்கள். இப்படி வதந்தியான செய்திகளை நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். சித்தியால் நான் பிரபலமாகி விட்டேன் என்று என் அக்கா மகள் ஜாலியாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள். இவர்கள் இப்படிதான் தவறான செய்திகளை பரப்புவார்கள் என்று நாங்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்