- Advertisement -
Homeபொழுதுபோக்குகொரியன் படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் - பட்டி டிங்கரிங் வேலை பார்ப்பதும்...

கொரியன் படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் – பட்டி டிங்கரிங் வேலை பார்ப்பதும் இதனால்தானா?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களை பொருத்தவரை, மற்ற மொழி படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக தான் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், புரியாத மொழி படங்களை பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அதிகபட்சமாக அவர்கள் பார்ப்பது சண்டை காட்சிகள் நிறைந்த ஆங்கிலப் படங்களை தான்.

சினிமா சார்ந்தவர்கள் மட்டுமே பிறமொழி சார்ந்த படங்களை அதிகமாக பார்க்கின்றனர். அதிலும் தமிழ் சினிமா இயக்குனர்கள், மற்ற மொழி படங்களை பார்க்கும்போது அதில் உள்ள கதைகளை, திரைக்காட்சிகளை அப்படியே காப்பியடித்து தங்களது படங்களாக பெயர் மாற்றி செய்து தமிழில் இயக்கி விடுகிறார்கள்.

முன்பெல்லாம், இயக்குனர்கள் மாதக்கணக்கில் ரூம் போட்டு யோசித்து ஒரு திரைக்கதையை உருவாக்கினார்கள். இப்போதெல்லாம், பிற மொழிகளில் வந்த படங்களை போட்டுப் பார்த்து, அதில் எந்த கதையை தமிழில் படமாக்கினால் வெற்றி படமாகும், யார் ஹீரோவாக நடித்தால் எடுபடும் என்றுதான் கணக்கு போடுகின்றனர். மற்றபடி புதிய கதைக்களங்களை உருவாக்க, அதற்கான மெனக்கெட அவர்கள் தயாராக இல்லை.

அந்த வகையில் பழைய படங்களை காப்பியடிப்பதில் வல்லவர்களாக இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், மணிரத்னம், கமல்ஹாசன் போன்றவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களது பல வெற்றிப் படங்களை பின்னோக்கி பார்த்தால் பழைய படங்களின் கலவையாக தான் அது இருக்கும். இப்படி பழைய சாதத்தை சூடு பண்ணி பரிமாறி பழகிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் பலருண்டு.

தமிழ் சினிமா படங்கள் பலவும், கொரியன் படங்களில் இருந்து உருவப்பட்ட கதைகளாக இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்த படங்களில் தமிழ் சினிமாவை போலவே சென்டிமென்ட் அதிகம். தாய் மகன் பாசம், காதல், திருமண உறவு, சமூக மரியாதை போன்ற தமிழர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கொண்ட கதைகளாக கொரியன் படங்கள் இருக்கின்றன.

அதனால் சென்டிமென்ட் நிறைந்த கொரியன் படங்களின் கதைகளை லவட்டி விடும் தமிழ் சினிமா இயக்குனர்கள், அந்த கதைகளை அப்படியே படமாக்கினால் நாளை காப்பிரைட் பிரச்னை வரும் என்பதால், அந்த கதையை அப்படியே உல்டாவாக்கி, பட்டி டிங்கரிங் பார்த்து, புது பெயிண்ட் அடித்து வேறு கதை போன்ற ஒரு சாயலில் சற்று மாற்றித் தந்து விடுகின்றனர். கற்பனை வறட்சியால், இப்படி ஒரு அவல நிலையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கொரியன் படங்களை நம்பிதான் பிழைப்பு நடத்துகின்றனர்.

சற்று முன்