- Advertisement -
Homeபொழுதுபோக்குபல மாதங்கள் தள்ளிப் போகிறதா அன்பறிவ் இயக்கும் கமல் 237 படம்? ஆனா அமெரிக்காவில் இருந்து...

பல மாதங்கள் தள்ளிப் போகிறதா அன்பறிவ் இயக்கும் கமல் 237 படம்? ஆனா அமெரிக்காவில் இருந்து இந்த மாத இறுதிக்குள் கமல் ரிட்டர்ன் ஆகிறாரே? – ரசிகர்கள் குழப்பம்!

- Advertisement -

நடிகர் கமல் நடிப்பில் வெளியான படம் இந்தியன் 2 பலத்த தோல்வியை தழுவியது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் இவ்வளவு மோசமான ஒரு பிளாப் படமாக இருக்கும் என்று ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 2 மற்றும் 3 என்ற 2 பாகங்களை ஒரே நேரத்தில் இயக்கியதால் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

எனினும் இந்தியன் 2 தந்த பலத்த அடியால் அதிகம் பாதிக்கப்பட்டது தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்தான். இந்த படத்தால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த இந்த தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக வேட்டையன் படம் தந்த வெற்றியால் சற்று மீண்டு வந்துள்ளது. அஜீத்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் வெளிவந்தால் இன்னும் நஷ்டத்தில் இருந்து மீள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போல் இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் படம் மிகப்பெரிய சாதனை படமாக தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நிலையில், இந்தியன் 2 படம் அதற்கு நேர்மாறாக மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் என்ற சரித்திரத்தை படைத்து விட்டதால் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

அதனால் இந்தியன் 3 படத்தை மிகச் சிறந்த படமாக தர வேண்டும் என்பதில் தீவிர முனைப்பில் உள்ளனர். இந்தியன் 3 படத்தில் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பை நடத்த கமல் முடிவு செய்திருக்கிறார். இதற்கான செலவை லைகா நிறுவனம் ஏற்காத பட்சத்தில், தனது சொந்த செலவில் அதை எடுக்கவும் கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

- Advertisement -

இந்த சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த படம் ரிலீஸான பிறகு இந்தியன் 3 படத்தை வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். அதே போல் ராம் சரண் நடித்த கேம்சேஞ்சர் பெரிய வெற்றி படமாக அமைந்தால், இந்தியன் 3 படத்துக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கும் என இயக்குனர் ஷங்கரும் எதிர்பார்க்கிறார்.

இதற்கிடையே கமல் நடிக்கும் 237வது படம், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் அல்லது டிசம்பரில் துவங்கும் என்று கூறிய நிலையில், இப்போது மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத இறுதியில் தான் துவங்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால் கமல் இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பி விடுகிறார். ஆனாலும் படத்துக்காக ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் காரணமாக, படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்